திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
இந்தியாவுக்கான
விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
இன்று (03) காலை, திருப்பதி கோயிலுக்குச் சென்று
வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய
விமானச் சேவைக்குச்
சொந்தமான, விசேட
விமானத்தினூடாக, திருமலையில் அமைந்துள்ள திருப்பதி கோயிலுக்குச்
சென்று, வெங்கடாசலபதியைத்
தரிசனம் செய்தாரெனத்
தெரிவிக்கப்படுகின்றது.
திருப்பதி
கோயிலில் வழிபாட்டில்
ஈடுபடுவதற்காக, நேற்றைய தினம், பிரதமர், இந்தியாவுக்குப்
பயணமானார். அவரோடு, பிரதமரின் பாரியார் மைத்திரி
விக்கிரமசிங்கவும் மேலும் இரு அமைச்சர்களும் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சென்னை விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய விமானப்படையின் சிறப்பு ஹெலிகாப்டரில் ரேணிகுண்டா விமான
நிலையத்திற்கு சென்றார். பிறகு, திருப்பதிக்கு காரில் அழைத்து செல்லப்பட்ட ரணில் விக்கிரமசிங்க
உள்ளிட்டோர், இரவு திருமலையில் உள்ள விடுதியில் தங்கினர். காலை 8 மணி அளவில் திருப்பதி
ஏழுமலையானை ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியுடன் சென்று
வழிபட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment