கருணாநிதி
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள
காவேரி மருத்துவமனையில்
பலத்த பொலிஸ் பாதுகாப்பு
உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் பதற்றம்
திமுக தலைவர் கருணாநிதி
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி
மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளதால் நேற்றிரவு
முதல் பலத்த
பொலிஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வர வாய்ப்புள்ளதால்
அதற்கேற்றார்போல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கழுத்தில் துளையிடப்பட்டு ‘‘டிரக்யாஸ்டமி’’ எனும் கருவி பொருத்தப்பட்டது.
கடந்த சுமார் 20 மாதங்களாக அவர் அந்த செயற்கை கருவி மூலம் சுவாசித்து வருகிறார்.
திமுக
தலைவர் கருணாநிதி
கடந்த 27-ம்
திகதி குறைந்த
ரத்த அழுத்த
பாதிப்பால் காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம்
அழைத்து வரப்பட்டு
அனுமதிக்கப்பட்டார். கடந்த 29-ம்
திகதி அவரது
உடல் நிலையில்
பின்னடைவு ஏற்பட்டதால்
பதற்றம் ஏற்பட்டது.
தொண்டர்கள் குவிந்தனர்.
தேசிய
தலைவர்கள், மாநில தலைவர்கள்,குடியரசுத் தலைவர்,
குடியரசு துணைத்
தலைவர், முதல்வர்,
ஆளுநர், சினிமா
பிரபலங்கள் என நாள்தோறும் பலரும் வந்து
கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றனர்.
இந்நிலையில் கருணாநிதியின் உடல் நிலையில் நேற்று
பின்னடைவு ஏற்பட்டது.
அவரது
உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும்,
24 மணி நேரத்திற்குப்
பின்னரே எதுவும்
கூற முடியும்
என்றும் காவேரி மருத்துவமனை
நிர்வாகம் அறிக்கை
வெளியிட்டது. இந்தத் தகவல் பரவியதை அடுத்து
தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் மருத்துவமனை
முன் குவிந்தனர்.
“தலைவா
வா, எழுந்துவா”
என்ற கோஷமிட்டபடியே
இருந்தனர். கருணாநிதியின் உடல் நிலையில் எந்த
முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் நேற்றிரவு மத்திய
அமைச்சர் நிதின்
கட்கரி மருத்துவமனை
வந்து ஸ்டாலின்,
கனிமொழியிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துச்
சென்றார். நேற்று
இரவு ஸ்டாலின்,
கனிமொழி உள்ளிட்டோர்
வீடு திரும்பினர்.
காவேரி
மருத்துவமனை பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2 துணை ஆணையர்கள்,
4 உதவி ஆணையர்கள்
தலைமையில் 500 பொலிஸார் பாதுகாப்புப்
பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில்
இருந்து தொண்டர்கள்
தங்களது குடும்பத்துடன்
வருவதால் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்
பிரதமர் மோடி
வர வாய்ப்புள்ளதாக
கூறப்படுவதால் அதற்கு ஏற்றார்போல் பாதுகாப்பு ஏற்பாடுகள்
பலப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது டெல்லியில்
அமைச்சரவை கூட்டத்தில்
பிரதமர் மோடி
கலந்துகொள்வதால் அதன் பின்னரே அவர் வர
வாய்ப்பு உள்ளது
என்பதால் அதற்கு
ஏற்றார்போல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்
காலை 9 மணி
முதல் மீண்டும்
ஸ்டாலின், கனிமொழி,
ஆ.ராசா,
பொன்முடி உள்ளிட்ட
திமுக நிர்வாகிகள்,
எம்.எல்.ஏக்கள் மருத்துவமனைக்கு
வந்தனர். தொண்டர்
கூட்டமும் அதிகரித்து
வருவதால் அப்பகுதியில்
போக்குவரத்துப் பாதை மாற்றப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment