வர்த்தக தொகுதியுடன் கூடிய
ஹிங்குரங்கொட புதிய பஸ் தரிப்பிடம்

இரண்டு மாடி வர்த்தக தொகுதியுடன் கூடிய ஹிங்குரங்கொட புதிய பஸ் தரிப்பிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
'எழுச்சிபெறும் பொலன்னறுவை' மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மூன்று நாட்களில் மக்களுக்கு உரித்தாக்கப்படவுள்ள 180 கருத்திட்டங்களில் சுமார் 60 திட்டங்கள் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.
'எழுச்சிபெறும் பொலன்னறுவை' அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 24 கடைகளை உள்ளடக்கிய வர்த்தக கட்டிடத் தொகுதியைக் கொண்ட ஹிங்குரங்கொட புதிய பஸ் தரிப்பிடம் அழகாகவும் முழு நிறைவாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக கட்டிட தொகுதியுடன் கூடிய பஸ் தரிப்பிடத்தை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனை சுற்றிப் பார்வையிட்டதுடன், குறைந்த வருமானம் பெறுவோருக்காக நிர்மாணிக்கப்பட்ட 10 வீடுகளுக்கான சாவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, நிமல் சிறிபால டி சில்வா, பிரதி அமைச்சர்களான அசோக்க அபேசிங்க, சாரதி துஷ்மந்த, பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க கொலன்ன, சம்பத் ஸ்ரீ நிலந்த உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top