ஹிங்குரக்கொட மாவட்ட வைத்தியசாலையில்
மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள்
ஹிங்குரக்கொட மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல அபிவிருத்தி நடவடிக்கைகளை ஜனாதிபதி நேற்று மக்களிடம் கையளித்தார்.
7.1 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவு, 36 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கதிரியக்க புள்ளிவிபரவியல் பிரிவுக்கான கட்டிடம், 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பற்சிகிச்சை நிலையம் மற்றும் 104 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்திய அலுவலர்களுக்கான வீட்டுத்தொகுதி ஆகியவற்றையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment