உலமாக்கள் பங்கேற்ற கூட்டத்தில்

மனித வெடிகுண்டு தாக்குல்:
50 பேர் பலி; 80க்கும் மேற்பட்டோர் காயம்
காபூலில் சம்பவம்


உலமாக்கள் கலந்து கூட்டத்தில், நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் ஆப்கானிஸ்தான் தலைநகர், காபூலில் இடம்பெற்றுள்ளது

இது குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

''காபூலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உலமாகள், பண்டிதர்கள் நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து கொண்டாட்டத்துக்கு நேற்று இரவு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, அந்த மண்டபத்துக்குள் நுழைந்த மர்ம நபர் தனது உடலில் கட்டயிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இதில் சம்பவ இடத்திலேயே 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 20 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பினரும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால், தலிபான் தீவிரவாதிகள், ஐஎஸ் அமைப்பினர் ஏற்கெனவே இதுபோன்று உலமாக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர்களைச் சந்தேகிக்கப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரும் உலமாக்கள் என்பது துரதிஷ்டவசமானது. இந்தக் கொண்டாட்டத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு தேவை என்று எங்களிடம் கோரப்படவில்லை. அதனால், மனித வெடிகுண்டாக வந்தவர் எளிதாக மண்டபத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளார்'' எனவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சம்பவத்தை நேரில் பார்த்த மண்டபத்தில் பணியாற்றிய பணியாளர் முஹம்மது முஜாமில் கூறுகையில், ''நான் அனைவருக்கும் குடிப்பதற்காக தண்ணீர் கொண்டுவரச் சென்று இருந்தேன். தண்ணீர் கொண்டு வருகையில், பயங்கரமான சத்தம் கேட்டது, மண்டபத்துக்குள் இருந்து கரும்புகை வெளியேறியது. அங்கு ஓடிச்சென்று நான் பார்த்தபோது, நாற்காலிகள் சிதறிக்கிடந்தன. ஏராளமானோர் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்'' எனத் தெரிவித்துள்ளார்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top