அமைச்சரவைக் கூட்டத்தில் வசந்த சேனநாயக்க



ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐதேக அரசாங்கத்தில், வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக இருந்த வசந்த சேனநாயக்க, அண்மையில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து, மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து இவர் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

எனினும், மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்ந்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

எனினும், அவரது இடத்துக்கு எவரும் நியமிக்கப்படாத நிலையில், இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வசந்த சேனநாயக்க பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அவர் மீண்டும் மஹிந்த அணியின் பக்கம் சென்றுள்ளார் என்று கருதப்படுகிறது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top