ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன்
– ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை பலத்தை நிரூபித்தாலும் கூட, ரணில் விக்கிரமசிங்கவை தான் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுக்களின் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, மஹிந்த ராஜபக்சஸக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது, நடுநிலை வகிக்குமாறு கூட்டமைப்பிடம் ஜனாதிபதி கோரியிருந்தார்.
எனினும், அதற்கு கூட்டமைப்பு மறுப்புத் தெரிவித்திருந்தது. இதன் போதே, தாம் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment