அலரி மாளிகைக்குள் நடந்த
மந்திராலோசனை!
உத்தியோகபூர்வ பிரதமராக ரணிலேயே
வெளிநாட்டு தூதுவர்கள்
இன்னமும் ஏற்றுக் கொண்டுள்ளதாக
அஜித் பீ பெரேரா தெரிவிப்பு
வெளிநாட்டு
தூதுவர்கள் இன்னமும் உத்தியோகபூர்வ பிரதமராக ரணில் விக்ரமசிங்கவையே ஏற்றுக்
கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
அலரி
மாளிகையில் நேற்று இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து
வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த
நாட்டின் செல்லுபடியாகும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை தூதுவர்கள் ஏற்றுக்
கொண்டுள்ளார்கள்.
ரணில்
கூறினால் தூதுவர்கள் வருவார்கள். மற்றவர்கள் கூறினால் வரமாட்டார்கள். உண்மையான
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு இராஜதந்திரிகள் அலரி மாளிகைக்கு
வருகைத்தந்து அவரை சந்தித்து கலந்துரையாடல்கள் மேற்கொண்டார்கள்.
இதன்போது
பேசப்பட்ட விடயங்களை என்னால் வெளியே கூற முடியாது. அது இராஜதந்திரிகளின்
கலந்துரைாயாடல்கள். இந்த நாட்டினை ஆட்சி செய்வது நாங்கள். எங்களிடமே மக்கள் பலம்
உள்ளது. எனவே எங்களால் நாடாளுமன்றத்தை நடத்திச் செல்ல முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment