வீசிக்கு பேசப்பட்ட தொகை
எத்தனை கோடி தெரியுமா.?

(.எச்.எம்.பூமுதீன்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் - அதன் தலைமைக்கும் துரோகம் இழைக்க முயற்சித்து , இறுதியில் மூக்குடைபட்டுப்போன வீசி இஸ்மாயிலுக்கு வழங்கப்படவிருந்த தொகை மற்றும் அந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்தவர் யார்? போன்ற தகவல்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

பிரதமராக மஹிந்தவை நியமித்த கையோடு - வீசியுடனான கட்சி தாவும் பேச்சும் ஆரம்பித்துள்ளது.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அந்த பெரும்பான்மையின அமைச்சர் - எந்த அமைச்சு வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இதற்கு நேரடியாக பதிலளிக்காத வீசி - "அமைச்சு மட்டும்தானா"? என வினவியுள்ளார்.

இல்லை..இல்லை பணமும் உண்டு.அது நீங்கள் நினைப்பதை விட அதிகம் என்று கூறியுள்ளார் அந்த அமைச்சர்.

சரி.,யோசித்து கூறுங்கள் எந்த அமைச்சு வேண்டும் என்று கூறிய அந்த அமைச்சரை - வீசி , கடந்த வாரம் சந்தித்து " வர்த்தக" அமைச்சை தாருங்கள் எனக் கேட்டுள்ளார்.

"உங்களுக்கு கெபினட் அமைச்சு தரப்படமாட்டாது.பிரதியமைச்சுத்தான் தரப்படும் என அந்த அமைச்சர் கூறிவிட்டு , கல்வி , உயர்கல்வி பிரதியமைச்ச் கேட்டுவிடாதீர்கள். உங்களை ஊழல் செய்தவர், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை நாசமாக்கியவர்" என்று பாராளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சுமத்தியவர்தான் அதன் கெபினட் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என்றாராம்.

பின்னர் , சுகாதார பிரதியமைச்சை பெற்றுக்கொள்வதென்று இணக்கம் காணப்பட்டது.

பிரதியமைச்சுடன் இவருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்று சும்மா சொல்லுங்களன் பார்ப்போம்.

உங்களால் கூறவே முடியாது .
இந்த தொகையை பேசியவர் ஒரு முஸ்லிம் அமைச்சர்.
அந்தப் பணம் வெளிநாட்டு வங்கியில் வீசியின் பெயரில் வைப்பிலிட இன்று காலை தயாரானது. அதற்குள்தான் வீசி மூக்குடைபட்டுப்போனார்.

இன்று காலை வைப்பிலிட இருந்த தொகை வெறும் 48 கோடிதான்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top