புதுடெல்லி – மஹிந்த இடையில் நம்பிக்கையோ,
புரிந்துணர்வோ கிடையாது
– தெற்காசிய விவகாரங்களுக்கான
நிபுணர் பேராசிரியர் முனி
புதுடெல்லிக்கும் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் எந்தவிதமான பரஸ்பர நம்பிக்கையே புரிந்துணர்வோ கிடையாது என்றும், ராஜபக்ஸவின் மீள் வருகையையிட்டு இந்தியா நிச்சயம் மகிழ்ச்சியடையவில்லை என்றும், இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியும், தெற்காசிய விவகாரங்களுக்கான நிபுணருமான பேராசிரியர் எஸ்.டி முனி தெரிவித்துள்ளார்.
The Straits Times இதழில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றிலேயே பேராசிரியர் எஸ்.டி முனியின் கருத்து இவ்வாறு இடம்பெற்றுள்ளது.
“வெளிப்படையாக எதையும் கூறாவிடினும், ராஜபக்ஸவின் மீள்வருகை இந்தியாவுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கவில்லை.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ( புதுடெல்லியின்)
அமைதியான ஆதரவு உள்ளது.
கடந்த கால அனுபவம், சீனா விடயத்தில் மாத்திரமன்றி- நன்றாக இருக்கவில்லை. தமிழர் பிரச்சினை உள்ளிட்ட இந்தியா எதிர்பார்த்த எதையும்,ராஜபக்ஸ நிறைவேற்றவில்லை.
புதுடெல்லிக்கும், ராஜபக்ஸவுக்கும் இடையில் நம்பிக்கையோ, புரிந்துணர்வோ கிடையாது” என்றும் அவர் அந்தக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment