அட்டாளைச்சேனையை03 மாதங்களுக்குள் நகரசபையாக்குவேன்:
ஹரீஸின் வாக்குறுதிக்கு என்ன நடந்துவிட்டது?
காற்றில் பறந்து விட்டதா?
மக்கள் கேள்வி!
அட்டாளைச்சேனை
பிரதேச சபையை இன்னும் 03 மாதங்களுக்குள்
நகர சபையாக்கப் போவதாக, உள்ளூராட்சி மற்றும்
மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர்
எச்.எம்.எம். ஹரீஸ்
கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை, அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது
உறுதியளித்திருந்தார்..
ராஜாங்க
அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அட்டாளைச்சேனையில் வாக்குறுதி வழங்கி இன்று சரியாக 92
நாட்களாவிட்டன
சந்தர்ப்ப
சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், கரகோசங்களுக்காகவும் ஒரு சில அரசியல்வாதிகள்
ஊருக்கு ஊர் வாக்குறுதிகளை
அள்ளி வழங்கிக்கிக் கொண்டிருக்கிறார்கள். சாய்ந்தமருதிலும் ஒலுவிலிலும் பொத்துவிலிலும்
இப்படியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அந்த மக்களும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். அதேபோன்று
அட்டாளைச்சேனை மக்களும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்களா?
வாக்குறுதிகளைக்
கொடுத்து விளையாட்டுக் காட்டும் வாக்குறுதி அரசியல்வாதிகளின்
அரசியலை
இனியும் அம்பாறை மாவட்ட மக்கள்
அனுமதிக்க மாட்டார்கள். மக்களை முட்டாள்களாகவும், கோமாளிகளாகவும்
எண்ணிக் கொண்டு, மக்களின் எதிரில்
வாக்குறுதியை அள்ளி வீசி விட்டு,
தன்பாட்டில் போய்க் கொண்டிருக்கும் ஏமாற்று
அரசியலை மக்கள் புரிந்துகொண்டுவிட்டனர்.
0 comments:
Post a Comment