2019-04-09 திகதியன்று நடைபெற்ற 
அமைச்சரவை கூட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்




01.சுற்றாடல் பாதுகாப்புக்கான தேசிய வேலைத்திட்டம் 2019 (நிகழ்ச்சி நிரலில் 8ஆவது விடயம்)

ஜனாதிபதி செயலகம் முன்னெடுத்து வரும் புனருதய என்ற 3 வருட (2015-2018) சுற்றாடல் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக திட்டமிடப்பட்டிருந்த வேலைதிட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி இலங்கையில் பேண்தகு சுற்றாடலை ஏற்படுத்தும் நோக்குடன் உத்தேச சுற்றாடல் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரி பாலசிறிசேன சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02.வெள்ளத்தினால் சேதமடைந்த கொலன்னால பிரதேசத்தில் வீடுகளுக்கு இழப்பீடு வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 10ஆவது விடயம்)

2016ஆம் ஆண்டில் பெய்த கடும் மழையின் காரணமாக களனி கங்கை பெருக்கெடுத்தமை மற்றும் மழை நீர் முறையாக வழிந்தோடாமை போன்ற நிலைமையின் காரணமாக கொலன்னாவ பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. இந்த வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்த சில வீடுகள் மற்றும் சொத்துக்களுக்காக தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியத்தினால் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டில் உள்வாங்கப்படாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மேலும் பல வீடுகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டியுள்ளது. இவற்றினால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் மதிபீட்டு அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. இதில் 1070 வீடுகளுக்கு நஷ்டஈடு செலுத்துவதற்கென பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அரச நிர்வாக மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த ஒன்றிணைந்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்தல் மற்றும் உலகளாவிய பாதுகாப்புத் தோற்றத்தை மேம்படுத்துவதற்கான ஒன்றிணைந்த சுற்றுலா டிஜிட்டல் நடைமுறையை முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில. 19 ஆவது விடயம்)

சுற்றுலா தொழிற்துறை மூலம் தற்பொழுது கிடைக்கும் 3.5 அமெரிக்க டொலர் வருமானத்தை 2020ஆம் ஆண்டளவில் 7.0 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்தல் சுற்றுலா தொழிற்துறையின் தேசிய தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை 6 இலட்சம் வரை அதிகரித்தல் சுற்றுலா துறையினரின் நாளாந்த செலவை நாளொன்றுக்கு 210 அமெரிக்க டொலர்களாக அதிகரித்தல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இலங்கை சுற்றுலா மூலோபாயத் திட்டம் 2017 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையிலான திட்டம் முன்னெடுக்கப்படடுள்ளது. இதன் கீழ் இலங்கையில் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளும் மொத்த சுற்றுலா அனுபவங்களை மேம்படுத்துவதற்கும் சுற்றுலா தொழிற்துறையின் மேம்பாடு மற்றும் உலகளாவிய பாதுகாப்புத் தோற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தேசிய மட்டத்தில் தொழில்நுட்பத் தீர்வுக்கான நடைமுறை ஒன்றாக ஒன்றிணைந்த சுற்றுலா டிஜிட்டல் நடைமுறையை  (IPDPwp) முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உத்தேச தீர்வு ஒன்றிணைந்த சுற்றுலா மற்றும் சுற்றுலா பயணங்களை ஒன்றிணைத்த உலகளாவிய விமான நிறுவனங்கள் தகவல்களை ஒன்றிணைத்தல் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கண்டறிதல் மற்றும் ஒன்றிணைந்த சுற்றுலா காப்புறுதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற சுற்றுலா 3 விடயங்களை கொண்டுள்ளது. இதற்கமைவாக உத்தேச ஒன்றிணைந்த சுற்றுலா டிஜிட்டல் நடைமுறை அரசாங்கம் மற்றும் தனியார் பங்குகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றுலா அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க  மர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. லோஹோர் சீமாட்டி கடன் நிதிச்சட்டத்தின் சரத்துகளின் திருத்தத்தை மேற்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 21ஆவது விடயம்)

அரச ஊழியர்களுக்கு நிவாரண வட்டி அடிப்படையில் கடன் வழங்கும் லோஹோர் சீமாட்டி கடன் நிதியம் 1927ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது அத்தோடு தற்பொழுது வருடாந்தம் 400 மில்லியன் ருபா நிதி நிவாரண வட்டி அடிப்படையில் கடனாக வழங்கப்படுகிறது. இந்த நிதியத்தை தொடர்ந்தும் மேம்படுத்தக் கூடிய வகையில் அதன் கணக்கு செயற்பாடுகளை கணக்காய்வாளரின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளக் கூடிய வகையில் 1951ஆம் ஆண்டு இலக்கம் 38 இன் கீழான லோஹோர் சீமாட்டி கடன் நிதி சட்டத்தில் சம்பந்தப்பட்ட சரத்துக்களில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. கடனீட்டு ஆவணப் பரிமாற்றம் திருத்த சட்ட மூலத்திற்கு உத்தேச திருத்தம் (நிகழ்ச்சி நிரலில் 22ஆவது விடயம்)

தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் கடன் ஈட்டு ஆவணப் பரிமாற்று சட்டத்தைப் புதுப்பிப்பதற்காக புதிய திருத்த சட்ட மூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறையில் அது தொடர்பில் ஆர்வம் காட்டும் தரப்பினரினால் மேலும் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு பங்கு சந்தையில் பலனுள்ள முதலீட்டு வர்த்தக ஒழுங்கு விதிகளுக்கு தேவையானவற்றை சரிசெய்தல் மற்றும் உயர் சுயாதீன தன்மையுடன் முன்னெடுத்து கடன்ஈட்டு ஆவணம் மற்றும் பரிமற்றல் ஆணைக்ழுவின் பொறுப்பை மேம்படுத்துவதற்கான திருத்தத்தை இந்த திருத்த சட்டமூலத்திற்குள் உள்ளடக்கி திருத்தத்தை மேற்கொள்வதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. 2011ஆம் ஆண்டு இலக்கம் 43 இன் கீழான குறைவான செயற்பாட்டைக் கொண்ட பயன்பாட்டு தொழிற்துறை அல்லது குறைந்த பயன்பாட்டுக்கான சொத்துக்களுக்கு புத்துயிர்ப்பை மேற்கொள்ளும் சட்டத்தை இரத்து செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது விடயம்)

மிகச்சிறிய நிறுவனங்கள் அல்லது குறைவான செயற்பாட்டு சொத்தை அரசாங்கம் சுவீகரித்து அவற்றை முறையாக முகாமைத்துவம் செய்தல் நிர்வாகம் அல்லது புத்துயிர்ப்புக்காக ஒழுங்குகளை மேற்கொள்வதற்கும் அவ்வாறானவற்றுக்கான இழப்பீட்டை வழங்குவதற்கும் அவற்றுக்கான ஒழுங்கு விதிகளை மேற்கொள்வதற்காக 2011ஆம் ஆண்டு இலக்கம் 43 இன் கீழான குறைவான செயற்பாட்டு தொழிற்துறை அல்லது குறைவான பயன்பாட்டு சொத்தை புத்துயிர்ப்பு செய்வதற்கான சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இருப்பினும் அதன் சட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஐயப்பாடு ஏற்படுத்துவதினாலும் நாட்டில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் வசதிகள் தொடர்பில் பாதிப்பை ஏற்படுத்துவதினால் இந்த சட்டத்தை இரத்து செய்வதற்கான பரிந்துரை ஒன்று 2018ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் சமர்ப்பிக்க்பட்டது. இதற்கமைவாக இதன் சட்டத்தை இரத்து செய்வதற்காக தயரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்திற்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக அரச தொழிற்துறை மலையக உரிமை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. கொரியா பொருளாதார அபிவிருத்தி புரிந்துணரவு நிதியத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு தேவையான வைத்திய உபகரணங்களை விநியோகித்தல் (நிகழ்ச்சி நிரலில் 31ஆவத விடயம்)

சில வைத்தியசாலைகளில் உள்ள வைத்திய உபகரணங்களுள் பெரும்பாலானவை 10 வருடங்கள் பழமை வாய்ந்ததுடன் பயன்படுத்த முடியாததுடன் அதன் ஆயுட்காலம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதே போன்று சில வைத்தியசாலைகளில் நாளாந்த செயற்பாடுகளுக்காக அத்தியாவசிய வைத்திய உபகரணங்களில் தட்டுப்பாடு இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுகாதார பாதுகாப்புக்கான கொரியா அமைப்பின் பிரதிநிதிகளினால் புதிய வைத்திய உபகரணங்களை விநியோகிப்பதற்கான திட்டமொன்று தொடர்பில் சாத்தியக்கூறு அறிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் தெரிவு செய்யப்பட்ட 17 வைத்தியசாலைகளில் உள்ள பயன்படுத்த முடியாத மற்றும் ஆயுட்காலம் நிறைவடைந்த வைத்திய உபகரணங்களுக்காக புதிய உபகரணங்களை விநியோகிப்பதற்கான திட்டத்திற்கு நிவாரண கடன் முறையின் கீழ் நிதியை வழங்குவதற்கு கொரியா பொருளாதார அபிவிருத்தி புரிந்துணர்வு நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைவாக இந்த நிதியத்தினால் வழங்கப்படும் 80 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் கீழ் இதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. மண்சரிவு அனர்த்தம் கூடுதலாக உள்ள பிரதேச வீதிகளில் மண்சரிவை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 41ஆவது விடயம்)

தேசிய வீதி வலைப்பின்னலில் மண்சரிவு அனர்த்தத்தை தடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 7619 மில்லியன் ஜப்பான் யென் நிதியை பயன்படுத்தி உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்திய பின்னர் மேலும் எஞ்சியுள்ள 2000 மில்லியன் ஜப்பான் யென்களை பயன்படுத்தி மண்சரிவு அனர்த்தம் அதிகமுள்ள பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ள அம்பேபுஸ்ஸ குருநாகல் திருகோணமலை வீதியில் 19கிலோமீற்றர் வெல்லவாய- எல்ல குபுல்வெல வீதியில் 7ஆவது கிலோ மீற்றர் மற்றும் பெரகல ஆழிஎல வீதியில் 22ஆவது கிலோ மீற்றர் 6ஆவது கிலோமீற்றர் மற்றும் 33ஆவது கிலோ மீற்றர் அருகாமையிலான இடத்தில் மண்சரிவை தடுப்பதற்கான நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி கனிய வள அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹாசிம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. 1973ஆம் ஆண்டு இலக்கம் 35 கீழான விளையாட்டுத் துறை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 51ஆவது விடயம்)

விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக வழிகாட்டிகளை வழங்கும் 1973ஆம் ஆண்டு இலக்கம் 25 இன் கீழான விளையாட்டுத் துறை சட்டம் 1993ஆம் ஆண்டு 1998ஆம் ஆண்டு மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் காலத்தின் தேவையின் அடிப்படையில் திருத்தப்பட்டது. தேசிய விளையாட்டு சங்கங்களின் வருடாந்த கணக்கறிக்கை கணக்காய்வாளரினால் சிபாரிசு செய்யப்படும் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையின் கீழ் கணக்காய்வை மேற்கொள்வதற்காக அனுமதியைப் பெற்றுக் கொடுத்தல் விளையாட்டுத் துறை சட்டத்தின் கீழ் கட்டளைகளை தயாரிப்பதற்கு அமைச்சருக்கு ஆற்றல் ஏற்படுத்தக்கூடிய விடயங்களுக்கு விரிவான வரையறைகளை செய்தல் விளையாட்டுத்துறை சட்டத்தின் கீழ் அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரித்தல் வாழ்க்கை மற்றும் மைதான விளையாட்டுத் தொடர்பில் சர்வதேச நற்பெயரைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் ஒலிம்பிக் அல்லது அதற்கு சமமான போட்டிகளுக்காக பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள 2 வீரர்களை தேசிய விளையாட்டு சபையில் உள்வாங்கக்கூடிய வகையில் தேவையான விதிகளை தயாரித்தல் விளையாட்டு சட்டத்தின் கீழ் தவறிழைப்பவர் தொடர்பில் தேவையான சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை மேலும் வலுவூட்டுதல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி 1973ஆம் ஆண்டு இலக்கம் 25இன் கீழான விளையாட்டுத்துறை சட்டத்தை முறையாக முன்னெடுப்பதற்கு தேவையான திருத்தத்தை மேற்கொள்வதற்கு தேவையான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சவை அங்கீhரம் வழங்கியுள்ளது.

10. சொய்சா மகளிர வைத்தியசாலையில் விசேட தாய் சேய் சிகிச்சைப் பிரிவு அலகொன்றை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 55ஆவது விடயம்)

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து வரும் கர்ப்பிணி தயர்மார்களுக்கான சொய்சா மகளிர் வைத்தியசாலைக்கு இருதய நோய் நீரிழிவு மற்றும் அதி இரத்த அழுத்தம் போன்ற நோய் பிரச்சினைகளுடனான கர்ப்பிணித் தாய்மார்கள் மகப்பேற்று மற்றும் ஏனைய சிகிச்சைக்காக வருகைத் தருகின்றனர் இந்த தாய்மார்களுக்கு மிகவம் சிறந்த சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் இந்த வைத்தியசாலையில் விசேட தாய் சேய் பிரிவொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிர்மாணப்பணிக்கான ஒப்பந்தத்தை 249.8 மில்லியன் ருபாவிற்கு பொறியியலாளர் பணிகளுக்கான மத்திய ஆலோசனை செயற்பாட்டு பொறியியலாளர் செயலக-பொறியாளர் சேவை என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



11. கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்காக 400000 தடுப்பூசி தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல் (400000 Vials of single dose Quadrivalent Human Papilliomavirus Recombinant Vaccine used to prevent Cervical Cancers) (நிகழ்ச்சி நிரலில் 56ஆவது விடயம்)

நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாம் இடத்தில் பெருமளவில் காணப்படும் புற்றுநோய் வகையாக கர்ப்பப்பை புற்றுநோய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. எதிர்க்காலத்தில் கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்காக பெபிலோமா வைரசு (Papilliomavirus)   தடுப்பூசியை வழங்கும் தேசிய வேலைத்திட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான 400000 Vials of single dose Quadrivalent Human Papilliomavirus Recombinant Vaccine used to prevent Cervical Cancers கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 1.98 மில்லியன் அமெரிக்க டொலர்களை யுனிசெப்பிடம் வழங்குவதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் சத்திர சிகிச்சைக்காக பயன்படுத்தப்படாத பொருட்களை கொள்வனவு செய்தல் (நிகழச்சி நிரலில் 57ஆவது விடயம்)

சத்திரசிகிச்சை நடவடிக்கையின் போது சத்திர சிகிச்சைக்காக பயன்படுத்தப்படாத 7 வகைப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய வரையறுக்கப்பட்டl CIC  Holdings பொது நிறுவனத்திடம் 428.8 மில்லியன் ரூபாவிற்கு வழங்குவதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. மின் விநியோகத்தின் நம்பிக்கை தன்மையை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 33 கிலோ வோர்;ட் மின்சாரத்தை விநியோகிக்கும் மின் விநியோக கோபுரம் மற்றும்  Transmission நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 601ஆவது விடயம்)

இலங்கை மின்சார சபைக்கு உட்பட்ட Transmission நிர்மாணித்தல் மற்றும் விநியோக வலைப்பின்னல்களை வலுவூட்டுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மின்சார விநியோகத்தின் நம்பிக்கை தன்மையை மேம்படுத்துவதற்கு உதவும் முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் 115 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 9 பொதிகளின் கீழ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதன் 4 பொதிகளின் கீழ் 33 கிலோ வோர்;ட் மின்சாரத்தை விநியோகிக்கும் Transmission  நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 6 781.5 மில்லியன் ரூபாவை சீனாவின் Qingdao Huijintong Power Equipment Co. Ltd. நிறுவனத்திடம் வழங்குவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவிகருணாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. பசுமை எரிசக்தி அபிவிருத்தி மற்றும் எரிசக்தி செயல்திறனை மேம்படுத்தும் முதலீட்டு வேலைத்திட்டத்தின் 2ஆவது கட்டத்தின் கீழ் 33 கிலோ வோல்ட் மின்சாரத்தை விநியோகிக்கும் வழி மற்றும் Transmission நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 6ஆவத விடயம்)

இலங்கை மின்சார சபைக்கு உட்பட்ட transmission மற்றும் விநியோகிக்கும் வலைப்பின்னலை வலுவூட்டுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் பசுமை எரி சக்தி அபிவிருத்தி மற்றும் எரிசக்தி செயற்திறனை மேம்படுத்தும் முதலீட்டு வேலைத்திட்டத்தின் 2ஆவது கட்டத்தின் கீழான நடவடிக்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 30 மில்லியன் யூரோக்கள் நிதி உதவி கிடைத்துள்ளது. இந்த நிதி உதவியின் மூலம் 6 பொதிகள் மற்றும் ஒரு ஆலோசனை சேவை ஒப்பந்தத்தின் கீழ் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு இதன் 4 பொதிகளின் கீழ் 33 கிலோ வோர்ட் மின்சாரத்தை விநியோகிக்கும் வழி மற்றும் Transsmission நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய 2708.6 மில்லியன் ரூபாவை வரையறுக்கப்பட்ட Ceylex Enggineering  தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவிகருணாநாயக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. கொழும்பு பங்குச்சந்தை பரிமாறல் பங்கின் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றியமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 66ஆவது விடயம்)

இலாபத்தை நோக்காக் கொள்ளாது அங்கத்தவர்களினால் துணை நிறுவன அமைப்பு என்ற ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் கொழும்பு பங்குகள் பரிமாறல் இலாபத்தை நோக்கமாகக் கொண்ட பங்கு உரிமையாளர்களின் உரிமை கொண்டுள்ள நிறுவனமாக மாற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படடுள்ளது. இதற்கமைவாக உத்தரவாதமிக்க வரையறுக்கப்பட் நிறுவனமாக நியமிக்கப்பட்டுள்ளது. இநத் நாளாந்த நிலைமையில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்த சட்டத்தில் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அடையாளங்கானப்பட்டுள்ள கொழும்பு பங்குச் சந்தை பரிமாறல் பங்குகளை பகிரப்படும் வீதத்தை உள்ளடக்கி திருத்தத்தை மேற்கொள்வதற்காக நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. நாட்டில் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக 100 மெகா வோர்ட் மேலதிக மின்வலுவவை 6 மாத காலத்திற்குள் கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 68ஆவது விடயம்)

தொடர்ச்சியான மின ;விநியோகத்தை உறுதி செய்வதற்காக 100 மெகா வோர்ட் மேலதிக மின்வலுவை கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அமைச்சரவையினால் நியமிக்கப்ட்ட நிலையியற் பெறுகைக்கழுவின் சிபாரிசுக்கமைய பல்லேகல கிரீட் துணை நிலையத்துக்காக 24 மெகா வோர்ட் மின்வலுவையும் காலி கிரிட் துணை பிரிவுக்காக 10 மெகா வோர்ட் மின்சாரத்தை 1 கிலோ வோர்ட் 30.20 ரூபாவிற்கு விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் பிரிட்டனின் Aggreko International Project ltd.. என்ற நிறுவனத்திற்கும் மஹியங்கனை கிரிட் துணை நிறுவனத்திற்காக 10 கிலோ வோர்ட் மின்சாரத்தை 1 கிலோவோர்ட் 30.58 ரூபாவிற்கும் பொலன்னறுவை கிரீட் துணை பிரிவிற்கு 8 மெகாவோர்ட் மின்சாரத்தை 1 கிலோ வோர்ட் 30.63 ரூபாவிற்கும் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் ஐக்கிய அரபு எமிரேட் இராஜ்ஜிய்தின் Altaaqa Alterrartive Solution Global FZE என்ற நிறுவனத்திடமும் ஹம்பாந்தோட்டை துணை பிரிவுக்கு 24மெகா வோர்ட் மன்சாரத்தை 1 கிலோ மெகாவோர்ட் 28.43ரூபாவிற்கும் ஹொரண கிரிட் துணை பிரிவுக்கான 24 மெகா வோர்ட் மின்சாரத்தை 1 கிலோ வோர்ட் 28.70 ரூபாவிற்கு விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் ஹொங்கொங்கிலுள்ள V Power Holdings Ltd என்ற நிறுவனத்திடம் 6 மாத காலத்திற்காக வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவிகருணாநாயக்க  சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. வீதி வெளிச்சத்திற்காக எல்ஈடி வீதி மின் குமிழ்களை பொருத்தும் திட்டம் நிகழ்ச்சி நிரலில் 75ஆவது விடயம்)

தற்பொழுது பயன்படுத்தப்படும் பாரம்பரிய வீதி மின் விளக்குகளுக்கு பதிலாக வீதி வெளிச்சத்திற்காக செயல்திறன் மிக்க எல்ஈடி வீதி மின்குமிழ்களை பொருத்தும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை ஒன்று கொரிய டெலிகொம் நிறுவனத்திடம் இதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பரிந்துரை தொடர்பில் மதிப்பீடு செய்து விடயங்களை சமர்ப்பிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்று அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது. உத்தேச திட்டத்தின் மூலம் பெறக்கூடிய நன்மைகளைப் போன்று இந்த கட்டமைப்பை பயன்படுத்தி கொழும்பு நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் பாதுகாப்பு மற்றும் கழிவு முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுப்பதற்கு சீசீடீவீ புகைப்படக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கு முடிந்தமை பொதுமக்களால் பயன்படுத்தக்கூடிய WIFI வசதிகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற பயன்கள் தொடர்பில் அதிகாரிகள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு வீதி வெளிச்சத்திற்காக செயல்திறன் மிக்க எல்ஈடி வீதி மின்குமிழ்களை பொருத்துவதற்கான திட்டத்தை கொரிய டெலிகொம் நிறுவனத்திற்கு வழங்கி நடைமுறைப்படுத்தவதற்கு உள்ளக மற்றும் பொது நிர்வாக அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18.தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகித்தல் (நிகழ்ச்சி நிரலில் 82ஆவது விடயம்)

தற்பொழுது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தீர்வுக்காக மேற்கொள்ளக்கூடிய இடைக்கால மற்றும் நீண்டகால நடைமுறைத் தொடர்பில் சிபாரிசுகளை சமர்ப்பிப்தற்காக கௌரவ பிரதமர் தலைமையில் நிதி மின்சக்தி எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி துறைமுகம் மற்றும் கப்பல் நடவடிக்கைகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி முதலான அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. கழிவு முகாமைத்துவத்திற்காக சிபாரிசுகளை சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 85ஆவது விடயம்)

கழிவு பொருட்களை உரிய வகையில் முகாமைத்துவம் செய்யாமையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்னர். அத்தோடு இது இயற்கை சூழலை அழிப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. இதே போன்று உரிய முறையில் கழிவு பொருட்களை அகற்றுவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிராக எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய பிரச்சினையாக உள்ள கழிவு பிரச்சினைக்கு உரிய வகையில் முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக உள்ளக மற்றும் பொதுநிர்வாக மற்றும் மகாகாண சபை உள்ளுராட்சி மன்ற அமைச்சர் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிரத்தி அமைச்சர் மற்றும் அமைச்சரவை அல்லாத பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோக அமைச்சரைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top