கொழும்பில் தற்கொலை தாக்குதல்!
மனைவி, பிள்ளைகளுக்காக குண்டுதாரியின் செயல்

இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னதாக தீவிரவாதி தனது சொத்துக்களை பிள்ளைகள், மனைவி மற்றும் உறவினர்களுக்கு எழுதி வைத்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரிகளில் ஒருவர் பிரித்தானியாவில் கல்வி கற்றுள்ளார் என அந்த நாட்டு பாதுகாப்பு தகவல் தெரிவிக்கின்றன.

அப்துல் லதீப் ஜமீல் மொஹமட் என்பவரே பிரித்தானியாவில் கல்வி கற்றதாக பிரித்தானிய பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த 2006 - 2007 ஆம் ஆண்டுகளில் பிரித்தானியாவில் கல்வி கற்றுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட 9 பேரில் அதிகமானோர் மிகப்பெரிய படிப்புகளை மேற்கொண்டவர்கள் என குறிப்பிடப்படுகின்றது. அவர்களில் ஒருவர் அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்பு மேற்கொண்டவராகும். அத்துடன் பொருளாதார ரீதியில் மிகவும் வலுவாக இருந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு தொடர்புடையவர் என கூறப்படுகின்ற மொஹமட் இப்ராஹிம் இன்ஸாப் அஹமட் என்பவருக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும், தாக்குதலுக்கு முன்னர் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரர்களின் பெயர்களில் எழுதியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவருக்கு சொந்தமாக இருந்த வெல்லம்பிட்டிய தனியார் நிறுவனத்தின் 450 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை தனது பிள்ளைகளின் பெயர்களில் எழுதியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் அவர் மற்றும் அவரது சகோதரர் இப்ராஹிம் இல்ஹாம் மொஹமட் என்பவருக்கு சொந்தமான கொழும்பு பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 100 லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சகோதரர் ஒருவரின் பெயரில் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மொஹமட் இப்ராஹிம் இன்பாஸ் அஹமட் என்பவருக்கு சொந்தமான 500 லட்சம் ரூபாய் பெறுமதியான காணி மற்றும் மாத்தளையில் அமைந்துள்ள 110 லட்சம் ரூபாய் தனியார் நிறுவனங்கள் இரண்டினை வழங்கியுள்ளனர்.

சொத்து மாற்றும் செயற்பாடுகள் மார்ச் 29 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் முதலாம் திகதிகளில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக அவரிடம் இருந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் லப்டொப்கள் உட்பட பொருட்களை, அவருக்கு கீழ் சேவை செய்த இருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top