காணாமல் போனோர் பணியகத்தை மூடத் தயாரா?
–ஜனாதிபதிக்கு அமைச்சர் சவால்
தனது
அனுமதியின்றி 40/1 தீர்மானத்தில்
கையெழுத்திடப்பட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
கூறுவாரெனின்,
ஜெனிவா
தீர்மானத்துக்கு
அமைய
உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான பணியகத்தை மூடுவதற்கு
அவர் உத்தரவிட
வேண்டும் என்று
அமைச்சர் ஹர்ஷ
டி சில்வா
தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில்
உரையாற்றிய அவர்,
“காணாமல்
போனோருக்கான பணியகத்தை ஜெனிவா தீர்மானத்துக்கு அமைவாகவே
உருவாக்கினோம். ஜெனிவா தீர்மானத்தில் இருந்து விலக
வேண்டும் என்றால்,
காணாமல் போனோருக்கான
பணியகத்தை தொடருவதில்
அர்த்தமில்லை. அதனை கலைத்து விடுவது நல்லது.
காணாமல்
போனோர் தொடர்பாக,
15 ஆயிரம் முறைப்பாடுகளை
இந்தப் பணியகம்
பெற்றிருக்கிறது. இதில், 14 ஆயிரம் பேருடைய முறைப்பாடுகளை,
ஜனாதிபதி செயலகமே
அனுப்பி வைத்திருந்தது.
அவ்வாறாயின்,
இந்தப் பணியகம்
இயக்க வேண்டும்
என ஜனாதிபதி
விரும்புகிறார் என்றே கருத வேண்டும்.
ஜனாதிபதி
உண்மையிலேயே ஐ.நா மனித உரிமைகள்
பேரவைக்கோ, காணாமல்போனோருக்கான பணியகத்துக்கோ
எதிரானவர் இல்லை
என்றே நான்
நினைக்கிறேன்.
அவரை
சிலர் தவறாக
வழிநடத்துகின்றனர் என தோன்றுகிறது.
ஜனாதிபதி தவறாக
வழிநடத்தப்படக் கூடாது. அதற்கு பதிலாக அவர்
எங்களுடன் இணைந்து
பணியாற்ற வேண்டும்.
காணாமல்
போனோருக்கான பணியகம், சிங்கள, தமிழ், முஸ்லிம்
என, காணாமல்
போன அனைத்து
மக்களின் பிரச்சினைகளையும்
கவனித்துக் கொள்கிறது.
நான்
இதனைக் கூறும்போது
ஜனாதிபதி என்
மீது ஏமாற்றம்
அடையலாம். ஆனால் நான் இதனைக்
கூற வேண்டியுள்ளது.
வரும்
தேர்தல்களை முன்வைத்து அரசியல் ஆட்டங்களை
ஆடக் கூடாது”
என்றும் அவர்
கூறினார்.
ගරු ජනාධිපතිතුමනි! සමාවෙන්න මෙහෙම කිව්වට. අතුරුදන් වූවන්ගේ කාර්යාලයට අයදුම්පත් 14,000 ක් විතර එවල තියෙන්නෙ ඔබතුමායි. සමහර උපදේශකයින්ගේ ලනු කන්න එපා.
President, please don’t misunderstand me for saying this. Even though you want to withdraw from the UNHRC resolution you sent 14,000 out of the total 15,000 applications to the Office of the Missing Persons that was set up as a result of the Resolution. Don’t be misled by your so called advisors.
ஜனாதிபதி அவர்களே! இவ்வாறு சொல்வதற்காக மன்னித்துக் கொள்ளவும். காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு 14000 விண்ணப்பப்படிவங்களை நீங்களே அனுப்பி உள்ளீர்கள். சில ஆலோசகர்களின் கயிற்றை சாப்பிட வேண்டாம்.
0 comments:
Post a Comment