நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ள
அவசரகால சட்டம்:
இராணுவத்தினருக்கு மேலதிக அதிகாரம்

நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ள அவசரகால சட்டம் ஊடாக சோதனை நடவடிக்கைகள், கைதுகளை மேற்கொள்ளும் அதிகாரங்களை எதிர்வரும் 30 நாட்களுக்கு இராணுவத்தினர் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

இலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னர் இன்றைய தினம் அரசாங்கம் இலங்கையில் அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதியின் தலைமையில் ஒன்றுகூடிய வேளையில் இந்தத் தீர்மானம் குறித்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவசர கால சட்டம் என்றால் என்ன

அவசர கால தடைச் சட்டம் என்றால் என்ன என்பதை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும் .

இல்லையென்றால் மிகப் பெரிய தண்டனைகளுக்கோ, துப்பாக்கிப் பிரயோகத்திற்கோ இலக்காக நேரிடும். இந்த செய்தி அனைவருக்குமான ஒரு எச்சரிக்கை!

இலங்கை அரசாங்கத்தால் நேற்றில் இருந்து அடுத்து வரும் பத்து நாட்களுக்கு அவசர காலத் தடைச் சட்டம் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அவசர கால தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் காலத்தில் எங்கேயும் எதற்காகவும் சுடப்படலாம்





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top