வெடிப்பு சம்பவங்களில் 
உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு
- அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவிப்பு

வெடிப்பு சம்பவங்களில் இறந்தவர்களுக்காக நஷ்ட ஈடும் மரணச் சடங்குகளுக்கான நிதி உதவியும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். இறந்தவர்களின் இறுதி சடங்கிற்காக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.

அத்தோடு இவர்களுக்காக ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளது. காயமுற்றோர்களின் நிலைமைகளை கவனத்தில் கொண்டு ஒரு இலட்சம் ரூபா முதல் 3 இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்கப்படவுள்ளது. இதே போன்று வெடிப்பு சம்பவங்களினால் சேதமடைந்த கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை இராணுவத்திடம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ராஜித சேனாரதன் தெரிவித்தார்.

சுற்றுலா துறையை கட்டியெழுப்புவதற்கான பணிகளையும் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமரும் ஜனாதிபதியும் இணைந்து இந்த சந்தர்ப்பத்தில் உறுதியுடன் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். அமைச்சரவை கூட்டத்தில் பாதுகாப்பு சபையுடன் தொடர்புபட்டவர் சமூகமளித்திருக்க வேண்டும். இந்த நடைமுறை இதுவரையில் நடைபெறவில்லை.ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் முதல் முறையாக பாதுகாப்பு சபை கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்றம் அவர் கூறினார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top