தௌஹீத் ஜமாத் பயங்கரவாதிகளால்
தற்கொலை தாக்குதல்!
அரசாங்கம் அறிவிப்பு
இலங்கையில்
நேற்று பல்வேறு
பகுதிகளில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை தௌஹீத்
ஜமாத் என்ற
அமைப்பு மேற்கொண்டதாக
அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான ராஜித
சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தற்கொலை
தாக்குதல் நடத்திய
அனைவரும் இலங்கையை
சேர்ந்தவர்களும் என்றும் அவர்கள் இந்த அமைப்பின்
உறுப்பினர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த
அமைப்பு உள்ளூர்
ரீதியாக உருவாகியதென
அமைச்சர் குறிப்பிடடுள்ளார்.
எனினும் அவர்களுக்கு
உள்ள ஏனைய
தொடர்புகள் குறித்து எங்களுக்கு தெரியாதென அமைச்சர்
கூறியுள்ளார்.
நேற்று
இடம்பெற்ற தற்கொலை
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்னரே
புலனாய்வு பிரிவு
தகவல் வழங்கியது.
அந்த விடயங்கள்
உண்மையானது.
இது
தொடர்பான தகவல்
பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்
அறிவிக்கப்பட்டது. எனினும் உரிய
நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த
ஆபத்து குறித்து
பிரதமர் ரணில்
விக்ரமசிங்கவிடம் அறிவிக்கவில்லை என அமைச்சர் மேலும்
தெரிவித்துள்ளார்.
தற்போது
இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு
கருத்து தெரிவிக்கும்
போதே அமைச்சர்
இந்தத் தகவலை
வெளியிட்டார்.
இலங்கையின்
பல்வேறு பகுதியில்
நேற்று நடத்திய
தற்கொலை குண்டுத்தாக்குதலில்
இதுவரை 290 உயிரிழந்ததுடன் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment