அரச பாடசாலகளில்
கற்பிக்கும் ஆசிரியர்கள்
டியூசன் எடுக்க தடை
- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
அரச
பாடசாலகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் லாப நோக்கில்
டியூசன் எடுக்கக்
கூடாது என
சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
பணியிடமாற்றத்தை
எதிர்த்து தொடரப்பட்ட
வழக்கை விசாரித்த
சென்னை உயர்நீதிமன்ற
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்
பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
அரச
பாடசாலகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள்
பணம் பெற்று
லாப நோக்கில்
டியூசன் எடுக்கக்கூடாது.
டியூசன் எடுக்கும்
ஆசிரியர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
அரசிடம் ஊதியம்
பெறுபவர்கள் லாப நோக்கத்திற்காக டியூசன் எடுப்பது
விதிமீறல். அரசை மிரட்டுவதற்காக ஆசிரியர்கள் போராட்டத்தில்
ஈடுபடுகின்றனர். இளைய சமுதாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்
ஆசிரியர்களுக்கு கருணை காட்டக்கூடாது.
வழக்கு
தொடர்ந்த தலைமை
ஆசிரியர் ரங்கநாதன்
50 மரக்கன்றுகளை நட உத்தரவிடுகிறேன். மேலும், கோரிக்கை
மனு தந்து
தலைமையாசிரியாக ஆன மல்லிகாவும் 50 மரக்கன்றுகளை நடவேண்டும்.
இவ்வாறு நீதிபதி
உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment