முஸ்லிம்களின் முக வெற்றிலை
கல்முனையே என்று கூறும்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரே!
முஸ்லிம் அரசியல்வாதிகளே!
இது உங்களின்கவனத்திற்கு...!
கல்முனை நகரில் நவீன
கட்டடத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கான ஒரு இடம் பலமான அத்திபாரத் தூண்களுடன் கல்முனை
முஸ்லிம்களின் முக வெற்றிலை என்று தேர்தல் காலத்தில் கூறும்
எந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியினாலும் கவனிப்பாரற்ற நிலையில் கடந்த 38 வருடங்களுக்கும் மேலாக அப்படியே விடப்பட்டிருப்பது
குறித்து இளைஞர்களுக்கு குறிப்பாக கல்முனை இளைஞர்களுக்கு தெரியுமா?
தேசிய வீடமைப்பு
அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான இந்த அத்திபாரத் தூண்கள் எமது நாட்டின்
சரித்திர கால பிரதேசங்களான பொலன்னறுவை, அநுராதபுரம் போன்ற பிரதேசங்களை ஆட்சி செய்த
மன்னர்கள் பாவித்த கட்டடம் ஒன்றின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அத்திபாரத் தூண்கள்
போன்று கடந்த 4 தசாப்தங்களாக காட்சியளித்துக்கொண்டிருக்கின்றது.
முன்னாள் அமைச்சர்
மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் பதவிக் காலத்தில் கல்முனையில் அரச செயலகக் கட்டடத்
தொகுதியை விரிவாக அமைக்கும் பொருட்டு இந்த அத்திபாரத் தூண்கள் அன்று கல்முனை
நகரில் போடப்பட்டது. இதில் ஒரு பகுதியில்தான் தற்போதுள்ள அரச செயலக கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டது.
அக்காலத்தில்
நாட்டில் நிலவிய பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் போதிய நிதி இல்லாமை போன்ற
காரணங்களால் இந்த அத்திபாரத் தூண்களில் அன்று முழுமையாக கட்டடங்கள் கட்டி
முடிக்கப்படவில்லை.
இவ்வாறு கடந்த 38
வருடங்களுக்கு முன் இடப்பட்ட இந்த அத்திபாரத் தூண்களே இன்று வரை சரித்திர கால
தூண்கள் போன்று காட்சியளித்துக்கொண்டிருக்கின்றது.
கல்முனை அரச செயலகக்
கட்டடத் தொகுதிக்குப் பின் கல்முனை இளஞர்கள் சென்று பார்த்தால் இதனை காணமுடியும்
முஸ்லிம் மக்களின் முக வெற்றிலை கல்முனை நகரம்
என கூறும் (தேர்தல் காலத்தில்
மாத்திரம்) அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளே! முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரே! இது உங்களின் கவனத்திற்கு...!
0 comments:
Post a Comment