முஸ்லிம் பாடசாலைகளின்
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள்
ஜுன் மாதம்10ம்
திகதி ஆரம்பமாகும்
முஸ்லிம்
பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜுன் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகும்
என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அடுத்த
வாரத்துடன் நோன்பு காலம் ஆரம்பிக்கின்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த
ஏப்ரல் மாதம் 17ம் திகதியே முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக ஆரம்பமாகவிருந்தன.
எனினும்
21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்குமான
விடுமுறைகள் நீடிக்கப்பட்டிருந்தன.
இந்த
நிலையில் நோன்பு காலமும் வருகின்ற நிலையில் முஸ்லிம் பாடசாலைகள் ஜுன் மாதம் 10ம் திகதியே
மீளத் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம்
ஏனைய அரச பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் திங்கட் கிழமை மீளத்திறக்கப்படும் என்று
கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும்
மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் நிலவுகின்ற நிலையில், கத்தோலிக்க தனியார்
பாடசாலைகளை அடுத்த வாரமும் திறக்க வேண்டாம் என்று கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம்
ரஞ்சித் ஆண்டகை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment