சாய்ந்தமருதில்
பயங்கரவாதிகள் தொடர்பில்
தகவல் வழங்கிய
3 முஸ்லிம் நபர்களுக்கு
அடித்திருக்கும்
அதிஷ்டம்!
சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி குடியேற்றக் கிராம பிரதேச வீடொன்றில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக
பொலிஸாருக்கு தகவல் அளித்த மூன்று முஸ்லிம் நபர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் பணப்பரிசு
வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
அதேபோல் , குறித்த சந்தர்ப்பத்தில் உடனடியாக செயற்பட்ட மூன்று
பொலிஸ் அதிகாரிகளுக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த வௌ்ளிக்கிழமையன்று மேற்படி மூன்று நபர்களும் வழங்கிய
தகவலின் பேரில் பொலிஸார் , மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து குறித்த வீட்டினை சுற்றிவளைத்த
போது வீட்டில் தங்கியிருந்த பயங்கரவாதிகள் மூன்று குண்டினை வெடிக்கச் செய்திருந்தனர்.
அதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்
இடையில் பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருந்தது. இந்த குண்டு வெடிப்பு மற்றும்
தாக்குதலில் 15 பேர் பலியாகியிருந்தனர். அதில் 6 பயங்கரவாதிகளும் அடங்குவர்.
மேலும் , இதன்போது படுகாயமடைந்திருந்த நிலையல் பயங்கரவாதி
சஹ்ரான் ஹஷீமின் குழந்தையொன்றும் மனைவியும் பொலிஸாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment