ரணிலுக்கு ஒற்றுமைப்பட்ட முஸ்லிம் எம்.பிக்கள்
 மீண்டும் ஒற்றுமைப்பட்டு
முஸ்லிம் சமூகத்தின்  நிலைமைகள் பற்றி
அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்
முஸ்லிம் சமூகம் கோரிக்கை


ரணிலின் ஆட்சியை பாதுகாப்பதற்கு  முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அன்று ஒற்றுமைப்பட்டு செயற்பட்டது போன்று தற்பொழுது முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு ஏன் செயல்படமுடியாமல் உள்ளது? என முஸ்லிம் சமூகம் கேள்வி எழுப்புவதுடன் முஸ்லிம் சமூகத்தின் தற்போதய இக்கட்டான நிலைமைகள் பற்றி அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்  என்றும் சமூகம் கோரிக்கை விடுக்கின்றது.
அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர் ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் போன்றோரை குறிவைத்து தமிழ் அரசியல்வாதிகள் சிலராலும், சில ஊடகங்களாலும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதற்கு எதிராக ஏன் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமைப்பட்டு தகுந்த பதிலடி கொடுக்க முடியாமல் உள்ளது எனவும் முஸ்லிம் மக்கள் வினவுகின்றனர்..
ஆளுநர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் உருவாக்கப்படும் கல்வி நிறுவனத்திற்கு எதிராக கண்கொத்திப் பாம்பு போன்று காத்திருந்தவர்கள் இச்சந்தர்ப்பத்தை பாவித்து பல பக்கத்திலிருந்தும் எதிர்ப்புக்களை வெளியிடுகின்றனரே ஏன் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமைப்பட்டு அவர்களுக்கு தக்க பதில் வழங்க முடியாமல் உள்ளது என்றும் கேள்வி எழுப்புகின்றனர்..
அண்மையில் நடைபெற்ற துன்பகரமான நிலைமைக்கு காரணமான அந்த குழுக்களை முஸ்லிம் சமூகம் தெளிவாக இனம் காட்டி பாதுகாப்பு படை வீரர்களுக்கு இன்றும் உதவி செய்கிறார்கள் இதற்கு ஒரு முன்னுதாரணம் சாய்ந்தமருதில் நடைபெற்ற செயற்பாடுகளையும் சாய்ந்தமருது மக்களின் ஒத்துழைப்பையும் முஸ்லிம் சமூகம் எடுத்துக்காட்டாக குறிப்பிடுகின்றது..

ஆனால் சில ஊடகங்கள் இவற்றை வித்தியாசமான முறையில் திசை திருப்பும் விதமாக முழு முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றம் சாட்டும் விதமான பல கருத்துக்களை முஸ்லிம் மக்களின் மனதுகளை வேதனைப் படுத்தும் விதமாக பதிவு செய்கின்றனர் என முஸ்லிம் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்..

இந்நிலையில், அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து முஸ்லிம் சமூகம் தொடர்பான இந்த இக்கட்டான சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடல் செய்து அரசுக்கும் பதுகாப்புத்துறைக்கும், நாட்டு மக்களுக்கும் நிலைமையை விளக்கவேண்டும் என முஸ்லிம் மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்..

எமது இலங்கை தேசத்தில் ஏற்பட்ட துன்பகரமான இந்த நிலைமைக்கு காரணமானவர்களை பற்றி முழுமையான தெளிவுகளை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெரும்பான்மை சமூகத்துக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்றும் தெரிவிக்ன்றனர்.

எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக ஒன்று கூடி முஸ்லிம் சமூகத்துக்கு எதிர்காலத்தில் ஏற்படப் போகின்ற மிக மோசமான பின் விளைவுகளை தடுத்து நிறுத்தி உரிமைகளை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என முஸ்லிம் சமூகம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top