பொது மன்னிப்பு வழங்க
நடவடிக்கை எடுத்தமைக்காக
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கச் சென்ற
ஞானசார தேரரும் தாயாரும்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், நேற்று (23) இரவு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், ஞானசார தேரரின் தாயாரும் கலந்துகொண்டிருந்ததோடு, இவர்கள் இருவரும், தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக, ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவ் அம்மையாருடன் ஜனாதிபதி  சுமூகமாக கலந்துரையாடினார்



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top