இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன்
தொடர்புடைய சந்தேக நபர் மியன்மாரில் கைது!


உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 39 வயதுடைய அப்துல் சலாம் இர்ஷாட் மொஹமட் என்ற இலங்கையரே எனவும் அவர் தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர் தன்னுடைய சுற்றுலா விசாவினை புதுப்பிக்க யாங்கூன் நகரில் உள்ள குடிவரவு அலுவலகத்திற்கு சென்றபோதே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 14 மாதங்களுக்கு மேலாக மியன்மாரில் சுற்றுலா விசாவில் தங்கியிருந்துள்ளார் எனவும் தெரயவந்துள்ளது.

இந்நிலையில் மலேசிய பொலிஸாரினால் அனுப்பப்பட்ட எச்சரிக்கையினை தொடர்ந்து, யாங்கூன் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த புதன் கிழமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top