இலங்கையில்
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான
அனைத்து நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்படும்
ஐக்கிய நாடுகளுக்கான
நிரந்தர வதிவிடப்
பிரதிநிதி
ஏ.எல்.ஏ.அசீஸ்
இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதற்கு அவசியமான
அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான
நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ.அசீஸ் தெரிவித்துள்ளார்.
7வது ஐக்கிய நாடுகளது வர்த்தக மற்றும் அபிவிருத்தி நிபுணர்கள்
மாநாடு ஜெனீவாவில் நேற்று முன்தினமும் இடம்பெற்றிருந்தது.
இதில் தலைமை தாங்கி உரையாற்றிய ஏ.எல்.ஏ. அசீஸ், பயங்கரவாதத்தை
தோற்கடித்து மீண்டும் பலமான சமூகத்தையும், பொருளாதாரத்தையும் இலங்கை கட்டியெழுப்பும்
என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளும், இலங்கையில்
கடந்த ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் தொடர்பில்
இரங்கலைத் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment