வன்முறைகளில் சேதமடைந்த
பள்ளிவாசல்களுக்கு நட்டஈடு
அமைச்சரவை
அங்கீகாரம்
நாட்டின்
பல்வேறு பகுதிகளில்
அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களினால்
ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு
நட்டஈடு வழங்க
அமைச்சரவை அனுமதி
வழங்கியுள்ளது.
உயிர்த்த
ஞாயிறு தாக்குதலில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்ட
அடிப்படையில் இதுவும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில்
வன்முறை சம்பவங்களினால்
சேதமடைந்த பள்ளிவாசல்களை
புனர்நிர்மாணம் செய்வதற்காக இந்த நட்டஈடு வழங்கப்பட
உள்ளது.
பிரதமர்
ரணில் விக்ரமசிங்கவினால்
முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி
வழங்கியுள்ளது.
24. சமீபத்தில் நாட்டில் சில பிரதேசங்களில்
ஏற்பட்ட மோதல்
நிலைமையின் காரணமாக இடம்பெற்ற சேதத்திற்காக இழப்பீடடு
தொகையை வழங்குதல்
(நிகழ்ச்சி நிரலில் 72ஆவது விடயம்)
சமீபத்தில்
சில பிரதேசங்களில்
ஏற்பட்ட மோதல்
நிலைமையின் காரணமாக சேதமாக்கப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்களை
மறுசீரமைத்தல் மற்றும் இந்த மோதலினால் ஏற்பட்ட
பாதிப்புக்காகவும் இதற்கு முன்னர்
உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத்தாக்குதலினால்
ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக
செலுத்துவதற்காக தீர்மானிக்கப்பட்ட நடைமுறையின்
கீழான இழப்பீட்டுத்
தொகையை செலுத்தவதற்காக
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment