அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களே!
சமுகத்தின் மீதுள்ள உச்ச கட்ட
உணர்வுகளால் சிந்திய
உங்கள் கண்ணீர் வீண் போகாது





அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களே!
உங்கள் கண்ணீர் வீண் போகாது சமுகத்தின் மீதுள்ள உச்ச கட்ட உணர்வுகளை, பள்ளிவாசல் உடைப்புகளை மக்களின் சொத்து அழிப்புக்களை கதைக்கும் பொழுது தன்னை அறியாமல் உணர்ச்சிகளால் அழுதுவிட்டீர்கள். உங்கள் பேச்சுகளும் கண்ணீரும்  வெளிக்காட்டியது.

முஸ்லிம்களின் ஆயுதம் கவலைப்பட்டு கண்ணீர்விட்டு (அல்லாஹ்விடத்தில்) வேண்டுவதுதான் அதனையே நீங்கள் புனித ரமழான் மாத இரவில் உபயோகித்திருக்கின்றீர்கள் நிச்சயம் உங்களின் கவலையும் ,கண்ணீரும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை சென்றடைந்திருக்கும்.  அதன் சக்தியை அல்லாஹ் விரைவில் வெளிப்படுத்துவான்.
முழு சமூதாயத்திற்காக விடும் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் அல்லாஹ்விடத்தில் மிகவும் சிறந்ததே. இதற்கான நீதியும் நியாயமும்  எம்மைப் படைத்து பரிபாலிக்கும்  எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருந்து நிச்சயம் கிடைத்தே தீரும்.

இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களின் இதயத்துடிப்பையும் எந்த ஒரு தடுமாற்றமுமின்றி தைரியமாக அச்சமின்றி வெளிக்கொணர்ந்து விட்டீர்கள். முஸ்லிம்கள் தரப்பில் எவைகள் வெளிப்படுத்தப் படவில்லை எனக் குமுறினரோ அவற்றையெல்லாம் சுத்தமான சுயநலமற்ற இதயத்தோடு கவலையுடனும் கண்ணிருடனும் முன்வைத்தீர்கள்.

முஸ்லிம் சமூகத்திற்கு நடந்த அநியாயங்களை நினைத்து அந்த கொடூர காட்சிகளை நேரடியாகச் சென்று பார்த்துவிட்டு அதற்காக பல இடங்களிலும் தன்னால் இயலுமான அளவு குரல் கொடுத்து போராடி உச்சகட்டத்தில் வடித்திருக்கின்ற கண்ணீர் என்பதை முஸ்லிம் சமூகம் நிச்சயம் உணரத்தான் செய்யும்.
-          மக்கள் விருப்பம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top