கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்
இன மத வெறுபாடற்ற ஒற்றுமையால்
இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
மனித நேயம் என்றும் வாழும்.

வைத்தியதுறை புனிதமானது. அதற்கு இன மத பேதம் தெரியாது என்பதற்கு நேற்று (21/05/2019) நடந்த இந்த நிகழ்வு சிறந்த உதாரணமாகும்.

பிரதான பித்தப்பைக் குழாயின் வாயிலுக்கு அருகாமையில் பித்தப்பைக் கல் அடைபட்டுக் காணப்படும் போது அதை ERCP மூலம் அகற்றுவதற்காக கொழும்பு களுபோவில ராகமை என்றெல்லாம் சென்ற மக்களுக்கு தற்போது எமது வைத்தியசாலையிலும் செய்வதற்கு வசதி இருப்பதென்பது மிகவும் சந்தோஷமான விடயமாகும்.

உயிர்த்த ஞாயிறில் நடந்த பயங்கரவாத குண்டுத்தாக்குதலின் பின் நாட்டிலே ஏற்பட்ட அசாதாரண ஒற்றுமையற்ற நிலையினைத் தொடர்ந்து மக்களின் ஒற்றுமையை வேண்டி அனைத்து மதத்தலைவர்களும் மக்களை வேண்டி நிற்கும் வேளையில்

எமது சத்திர சிகிச்சை நிபுணர் Dr.AWM.Sameem அவர்களுடன் இணைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேவைபுரியும் Dr. Subasinghe Gastroenterologist அவர்களும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் Dr Srinitharan அவர்களும் மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை, மயக்க மருந்து செலுத்தும் வைத்தியர்கள் என எல்லா மதத்திலுமுள்ளவர்கள் ஜாதி மத இன பேத மின்றி ஒற்றுமையாக ஒன்றாக வைத்திய சேவையை வழங்கி இரண்டு ERCP சத்திரசிகிச்சைகளையும் வெற்றிகரமாக செய்து முடித்தது மக்களின் ஒற்றுமையே எமது எதிர்பார்ப்பு எனபதற்கு ஒரு முன்மாதிரியான எடுத்துக்காட்டாகும்.

இதற்காக எமக்கு எல்லாவிதத்திலும் உதவியாக உள்ள எமது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr ALF Rahman அவர்களுக்கும் சத்திரசிகிச்சைக் கூடத்தில் கடமைபுரியும் தாதியர்கள் சிற்றூழியர்கள் அனைவருக்கும் மற்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய அனைவருக்கும் எமது பாராட்டுக்களும் நன்றிகளும்உரித்தாகட்டும் .







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top