அரச ஊழியர்களுக்கு 2500 ரூபாய்
மாதாந்த இடைக்கால கொடுப்பனவு
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல்
சுற்றுநிரூபம் வெளியானது!


அரச ஊழியர்களுக்கு 2500 ரூபாய் மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கும் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

திறைச்சேரியின் அனுமதியுடன் அரச நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் அமைச்சுக்களில் செயலாளர்கள் , மாகாண தலைமை செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு மேற்படி சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த கொடுப்பனவு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழங்க இம்முறை பட்ஜெட்டின் மூலம் பரிந்துரைக்கப்பட்டது.

இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாய் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்பட்டாலும் , அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 7800 ரூபாய் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top