வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக
தரம் உயர்த்த நடவடிக்கை
- அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
யாழ்ப்பாண
பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைப்
பீடமும், பிரயோக
விஞ்ஞான பீடமும்
வவுனியா வளாகத்தில்
நடத்தப்படுகின்றன.
பாடநெறிகளின்
தரத்தை மேம்படுத்தும்
நோக்குடன் ஆங்கில
மொழியில் கற்பிக்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின்
வவுனியா வளாகத்தை
பல்கலைக்கழகமாக தரமுயர்த்தல் தொடர்பாக நேற்று அமைச்சரவையில்
தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அமைச்சரவையில்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
04. யாழ் பல்கலைக்கழகத்தில் வவுனியா வளாகத்தை
வவுனியா பல்கலைக்கழகமாக
தரமுயர்த்துதல் (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது விடயம்)
யாழ்
பல்கலைக்கழகத்தில் வர்த்தகக் கல்வி
மற்றும் வணிக
விஞ்ஞானம் போன்ற
பீடங்கள் வவுனியா
வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த
வணிக கல்வி
பீடத்தின் கீழ்
நிதி மற்றும்
கணக்காய்வு மற்றும் பொருளாதார விஞ்ஞானம் மற்றும்
முகாமைத்துவ கல்விப் பிரிவும் இதன் வணிக
விஞ்ஞான பீடத்தின்
கீழ் பௌதீக
விஞ்ஞானம் மற்றும்
உயிரியல் விஞ்ஞான
கல்விப் பிரிவும்
அமைக்கப்பட்டுள்ளன.
இந்த
கற்கை நெறியின்
தரத்தை மேம்படுத்துவதற்காகவும்
இந்த பட்டப்படிப்பு
கற்கை நெறி
ஆங்கில மொழியில்
கற்பிக்கக் கூடிய வகையிலும் யாழ் பல்கலைக்கழகத்தில்
வவுனியா வளாகம்
வவுனியா பல்கலைக்கழகமாக
ஸ்தாபிப்பதற்காக நகரத் திட்டமிடல் நீர் விநியோகம்
மற்றும் உயர்கல்வி
அமைச்சர் ரவூப்
ஹக்கீம் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment