அமைச்சர் ரிசாட்டுக்கு எதிரான
நம்பிக்கையில்லா பிரேரணை!
சபாநாயகரின் அறிவிப்பு
இரு திகதிகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு



அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் விவாதிக்கப்பட உள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய இது குறித்து நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் அமைச்சர் பதியூதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துகொள்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படாமல் கட்சித்தலைவர்களின் கூட்டம் நிறைவடைந்தது.
    
அந்தப் பிரேரணையை, ஜூன் மாதம் 18,19ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துகொள்வதற்கு, ஆளும் தரப்பு திகதி குறித்தது. எனினும், அது அண்மித்த நாளல்ல எனத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இறுதி முடிவின்றி, கட்சித்தலைவர்கள் கூட்டம் நிறைவடைந்தது.விவாதம் செய்வதற்காக திகதியொன்றை நிர்ணயம் செய்வதற்காக இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து எதிர்வரும் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் விவாதிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top