தனது இல்லத்திற்கு செல்லும் பாதையை
மூடிய மஹிந்த ராஜபக்ஸ

சில பாடசாலைகளுக்கு முன்னால் தனது பாதுகாப்பு தரப்பினருடன் சென்று கண்காட்சி நடத்தியவர்,      தற்போது விஜேராம மாவத்தை வழியை  மூடி வைத்துள்ளமை குறித்து அமைச்சர் ஹர்ச டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்

                                      
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள விஜேராம மாவத்தை வழியை மீண்டும் மூடுமாறு அவர், தனது பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

விஜேராம வீதியின் நான்கு வழிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக அமைச்சர் ஹர்ச டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள குறிப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மஹிகிந்த ராஜபக்ஸ பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புமாறு அறிவித்து, சில பாடசாலைகளுக்கு முன்னால் தனது பாதுகாப்பு தரப்பினருடன் சென்று கண்காட்சி நடத்தி விட்டு, தற்போது விஜேராம மாவத்தை மூடி வைத்துக்கொண்டுள்ளமை குறித்து ஹர்ச டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.


           

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top