உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்
கெப்பிதிகொல்லேவ மற்றும் ஹொரவபொத்தானை
பிரதேசங்களை சேர்ந்த ஐவர் கைது



உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய  தீவிரவாதிகளுக்கு உதவியளித்ததாக சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் ஹொரவபொத்தானை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினரொருவரான அப்துல் மஜீத் மொஹமட் நியாஸ் என்ற நபருடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்துள்ள நிலையில் , தீவிரவாதி மொஹமட் சஹ்ரானின் செயற்பாடுகளுக்கு இவர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கெப்பிதிகொல்லேவ மற்றும் ஹொரவபொத்தானை பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top