கல்முனை வலயத்திற்குரிய காணி
பறிக்கப்பட்ட வரலாற்று
துரோகம்.
கல்முனை
நகரில் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு கட்டிடம் அமைக்க கிடைத்த காணித்துண்டு
முனாபிக் தனமாக எவ்வாறு பறிக்கப்பட்டது என்பதை பதிவிட விரும்புகிறேன்.ஏனெனில்
அச்சம்பவம் களை அறிந்த சாட்சி நான்.
1985ம் ஆண்டு கல்முனை கல்வி அலுவலகத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றபின்
பல இடங்களில் நடமாடும் அலுவலகமாக இயங்கி வந்தது.இறுதியாக வீடமைப்பு அபிவிருத்தி
அதிகார சபை கட்டிடத்தில் வாடகை அடிப்படையில் இயங்க ஆரம்பித்தது.
1996 அக்டோபர் மாதம் கல்முனை வலய கல்வி பணிப்பாளராக ஐ.எம்.இஸ்ஸதீன் சேர்
நியமிக்கப்பட்டதும் அரச காணி ஒன்றை பெற்றுக் தனிக் கட்டிடம் ஒன்றை அமைக்கும்
முயற்சியில் இறங்கினார்.
அவ்வேளையில்
கல்முனை பிரதேச செயலாளராக மர்ஹும் பளீல் கடமையாற்றுகிறார்.அவரை சந்தித்து அரச காணி
கோரிக்கையை முன்வைத்தபோது தற்போதைய கல்முனை பிரதம தபால் அலுவலகத்திற்கு முன்னால்
உள்ள குளத்தில் காணித்துண்டை தருகிறார்.
அதன்
பின்னர் அக்காணியில் soil testing ற்காக மாகாண
கல்வி அமைச்சின் மூலமாக 500000 இலட்சம் ரூபாய்
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் நடைபெற்று கொண்டிருந்த போது இஸ்ஸதீன் சேர்
திடீரென சம்மாந்துறைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார்.
கல்முனைக்கு
சாபிதீன் சேர் கொண்டு வரப்படுகிறார்.அவரிடம் கல்முனை வலயக் கல்வி அலுவலகம் அமைக்க
ஒதுக்கப்பட்ட காணியில் எதுவும் நடைபெறவில்லை.அதனால் குறித்த காணியை மீளவும்
அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாக கடிதம் ஒன்றை அமைச்சர் அஷ்ரபின் மிக நெருங்கிய
உறவினர் ஒருவர் கேட்கிறார்.
அதற்கு
பகரமாக சாபிதீன் சேருக்கு அம்பாறை மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் பதவி வழங்குவதாக
வாக்குறுதி வழங்கி கடிதத்தை பெற்று அவரை அம்பாறைக்கு அனுப்பி விட்டு கல்வி அலுவலக
காணியை அபகரித்து மீன்பிடி திணைக்களத்திற்கு வழங்குகின்றனர்.
இது ஏன்
நடந்தது எனில் கல் முனை யில் காணி இல்லாமல் மீன்பிடி காரியாலயம் அமைக்க 4000000 ரூபாய் அமைச்சர் அஷ்ரபின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு
விட்டது.அதற்கான கமிஸனும் ஒப்பந்த காரரிடம் இருந்து பெற்று விட்டனர்.
காணியை
காட்டுமாறு ஒப்பந்ததாரர்கள் கோரியபோதுதான் இந்த முனாபிக் தனம் அரங்கேற்றப்பட்டதுடன்
கல்விக்கு துரோகமும் இழைக்கப்பட்ட து.எப்படி கல்வி ஏமாற்றப்பட்டுள்ளது.
- - ஏ.எல்.எம்.முக்தார்
எமது
சமுதாயத்தின் நாளைய தலைவர்களான இன்றைய எம் இளைஞர்கள் வரலாறுகளைத் தெரிந்து
கொள்ளவேண்டும் என்பதற்காக இதனை பதிவேற்றம் செய்கின்றோம்.
.- மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment