மாற்றம் அவசியம்
பாதையின் திசையை மாற்ற வேண்டியது
காலத்தின் கட்டாயம்
நீண்ட
தூரம் பயணித்தும்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை முடிவு தெரியவில்லை
எனில், பாதையின்
திசையை மாற்ற
வேண்டியது காலத்தின்
கட்டாயமாகிறது. அது தான் யதார்த்தமும் கூட.
எமது
நகர சபையைப்
பொறுத்தவரை அரசியல் ரீதியாக அதனைப் பெறுவதற்கு
இப்போதைக்கு சாத்தியமில்லை. இன்னும் அவ்வாறு முயற்சிப்பது
விழலுக்கிறைத்த நீராகவே ஆகப்போகின்றது.
எனின்,
தீர்வு என்ன?
நீதிமன்றத்தை
நாடுவதைத் தவிர
வேறு வழியில்லை.
தீர்ப்பு எமக்கு
சாதகமாக கிடைக்குமா
இல்லையா என்பது
இறுதியில் தான்
தெரியும். கிடைத்தால்
சாதகம். இல்லையேல்
நஷ்டமில்லை.
அதுவரை
ஊரை காயப்போட
வேண்டிய அவசியமில்லை.
அபிவிருத்தியை தவிர்க்கவேண்டிய தேவையில்லை.
விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும்
இன்று எமது
ஊரில் 3 முக்கிய
அரசியல் புள்ளிகள்
வலம் வருகிறார்கள்.
சலீம்
சேர், ஜெமீல்,
சிராஸ் ஆகியோரே
அவர்கள்.
மூன்று
கட்ட அரசியல்
அதிகாரங்கள் உள்ளன. மாநகர சபை, மாகாண
சபை, நாடாளுமன்றம்.
இந்த மூன்று
கட்டங்களிலும் எமக்கான அரசியல் அதிகாரத்தை எவ்வாறு
பெறுவது என்பது
பற்றியே கவனம்
செலுத்தப்பட வேண்டும்.
இந்த
மூவரையும் மூன்று
கட்ட அரசியல்
அதிகாரத்தை பெறுவதற்கு காய்நகர்த்த வேண்டும். இம்
மூவரையும் ஓரணியாக்கும்
போது எமது
ஊரைப் பிளவில்லாமல்
ஒரு கட்டுக்கோப்புக்குள்
கொண்டுவர முடியும்.
அதேவேளை
இம் முயற்சியானது,
அரசியல் கட்சிகளுக்கு
பலத்த அழுத்தத்தைக்
கொடுக்கும். சிலவேளை எமது நகர சபை
தொடர்பாக அவர்களின்
நிலைப்பாட்டில் மாற்றத்தையும் ஏற்படுத்தலாம்.
இந்த
மும்மூர்த்திகளையும் மூன்று திசைகளில்
பயணிக்க விடுவதானது
எமது ஊருக்கு
பல வகைகளிலும்
தீங்காகவே அமையப்போகிறது.
தேர்தல்களில் பலவிதமான பின்னடைவுகளையே தரும்.
எனவே,
மாற்றத்தை நோக்கி
பயணிக்க வேண்டியது
அவசரமாகவும், அவசியமாகவும் தேவையாகவுள்ளது.
@ D N A
0 comments:
Post a Comment