கல்முனைக்கு என்னதான் நடக்கிது
ஒரே கட்டடம் ஆனால் இரண்டு ஒப்பந்தங்கள்
ஜூன் 19 இல் ஒன்று செப்டம்பர் 26 இல் மற்றையது ...
முன்னையது 510 மில்லியன் இரண்டாவது 500 மில்லியன்...


இது 2019-06-19
கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத்தொகுதி அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து..!
நகர திட்டமிடல், நீர் வழங்கல், உயர் கல்வி அமைச்சின் 510 மில்லியன் ரூபா செலவில் கல்முனை மாநகர சபைக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடத்தொகுதி அமைப்பதற்காக கட்டிடங்கள் திணைக்களம் மற்றும் கல்முனை மாநகர சபை என்பவற்றுக்கிடையிலான ஒப்பந்தம்
இன்று புதன்கிழமை (19) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த ஒப்பந்தத்தில் கட்டிடங்கள் திணைக்களத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் முஹம்மட் இஸ்மாயில் அவர்களும் கல்முனை மாநகர சபையின் சார்பில் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி .எம்.றகீப் அவர்களும் கைச்சாத்திட்டனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சரும்
பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளரும் கல்முனை மாநாகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர் ஆகியோர் முன்னிலையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.நபீல் உள்ளிட்ட அமைச்சின் உயரதிகாரிகளும் கல்முனை மாகர சபையின் திட்டமிடல் பிரிவு அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், மேற்படி அமைச்சின் அமைச்சராக பதவி வகித்தபோது, இதற்காக 510 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
@
Media Division



இது 2019-09-26
500 மில்லியன் செலவில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத்தொகுதி நிர்மாணத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து..!
-----------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் ஏற்பாட்டில் நகர திட்டமிடல், நீர் வழங்கல், உயர் கல்வி அமைச்சின் 500 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் கல்முனை மாநகர சபைக்கு அனைத்து நவீன வசதிகளும் கொண்ட புதிய கட்டிடத்தொகுதி அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடபட்டுள்ளது. இந்நிகழ்வு இன்று (2019-09-26) வியாழக்கிழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் முன்னிலையில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி .எம்.றகீப், தேசிய கட்டிடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.எம்.இஸ்மாயில் மற்றும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எச்.எம்.நபீல் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் எம்.நித்தியானந்தன், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், எம்.நயீமுல்லாஹ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் .ஆர்.எம்.ஹபீஸ், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், இணைப்பாளர் .சி.சமால்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

5,950 சதுர மீற்றர் பரப்பளவில் ஆறு மாடிகளைக் கொண்டதாக இப்புதிய கட்டிடத்தொகுதி அமைக்கப்படவுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் 2021ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படவுள்ளது. இக்கட்டிடத் தொகுதியில் மாநகர சபை நிர்வாக அலுவலகம், முதல்வர் செயலகம், சபா மண்டபம், கேட்போர் கூடம், வாகனத் தரிப்பிடம் மற்றும் பல்சேவை நிலையங்கள் என்பன அமைக்கப்படவுள்ளன.

60 வருட கால பழைமை வாய்ந்த, தற்போதைய மாநகர சபை கட்டிடம் முழுதாக அகற்றப்பட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. இதன் நிரமாணப் பணிகள் அடுத்த ஒரு சில வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி .எம்.றகீப் தெரிவித்தார்.
 @
Mayor's Media Division









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top