வசதி குறைந்த 3,000
பாடசாலைகளுக்கு
நடமாடும் விஞ்ஞான கூடம்
- கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்
வசதி குறைந்த மூவாயிரம் பாடசாலைகளுக்கு நடமாடும் விஞ்ஞான கூட கட்டமைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டி மத்திய கல்லூரியின் விளையாட்டு அரங்கு, நீச்சல் தடாகம், பல் சிகிச்சை நிலையம் மற்றும் கேட்போர் கூடம் போன்றவற்றை திறந்து வைக்கும் நிகழ்வின் போதே கல்வி அமைச்சர இவ்வாறு தெரிவித்தார்.
தான் கல்வியமைச்சராக பதவியேற்ற போது பாடசாலைகளின் மின்சார வசதி 60 சதவீதமாக காணப்பட்டது. அது இன்று 98 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
யுகத்தின் தேவைகளுக்கு ஏற்ப பாடங்களில் மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கரை வருடங்களுக்குள் நாட்டில் கல்வித்துறையை முன்னேற்றுவதற்காக உயர்ந்தபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதிபர்கள் மற்றும் நிர்வாக சேவையிலுள்ள சுமார் 2,000 உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக சுமார் 6,000 அதிபர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் ஆசிரியர் கல்வி தேவைக்காக புதிதாக 1,500 உத்தியோகத்தர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று கல்வியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
குளியாபிட்டிய மத்திய கல்லூரியில் புதிய நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகம், பற் சிகிச்சை நிலையம், உள்ளக விளையாட்டரங்கை திறந்து வைத்தல் மற்றும் மூன்று மாடி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
பெரும்பான்மை பலம் கொண்ட ஆட்சி எம்மிடல் இல்லை. ஜனாதிபதி வேறு கட்சி, மாகாண சபை அதிகாரங்களும் வேறு கட்சியிடம், இவ்வாறு இருக்கும் நிலைமையிலேயே பாரியளவிலான வேலைகளை முன்னெடுத்துள்ளோம். அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டம் என்னுடைய எண்ணக்கருவில் முன்னெடுக்கப்பட்ட திட்டமாகும். நான் பாடசாலைக்கு நடந்தே கல்வி பயில சென்றுள்ளேன்.இதன்படிதான் நகரத்திலுள்ள பாடசாலைகளில் உள்ள வசதிகளை கிராமத்திலுள்ள பாடசாலைகளுக்கும் வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்ததிட்டத்தை ஆரம்பித்தேன். அதிகாரங்கள் போதியளவு இல்லாத போதும் கல்வி துறையை கட்டியெழுப்புவதற்காக நான்கு ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளேன் என்றும்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment