தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளில்
சீன நிறுவனத்தின் பெயரில்
ரூ 200 கோடி மோசடி
ஜனாதிபதி தெரிவிப்பு
தாமரைக்
கோபுர நிர்மாணத்திட்டத்திற்கென
அரசாங்கம் வழங்கிய
200 கோடி ரூபா
நிதியை சீன
நிறுவனமொன்றின் பெயரில் மோசடிசெய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன நேற்று
தெரிவித்தார்.
உண்மையில்
அத்தகைய நிறுவனமொன்று
சீனாவில் இயங்கவில்லை.
அது ஒரு
போலி நிறுவனம்
என்ற உண்மை
பின்னரே அரசாங்கத்திற்கு
தெரியவந்ததாகவும் இதனால் அரசாங்கம் 200 கோடி ரூபாவை
இழக்க நேரிட்டதாகவும்
ஜனாதிபதி தெரிவித்தார்.
2012ம் ஆண்டு இதற்கான நிர்மாணப்
பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது
குறித்த உடன்படிக்கையில்
கைச்சாத்திட்ட எலைய்ட் என்ற சீன நிறுவனத்திற்கு
அரசாங்கம் 200 கோடி ரூபாவை முற்பணமாக வழங்கியது.
அந்த நிறுவனம்
2014ம் ஆண்டு
தலைமறைவாகியது. 200 கோடி ரூபாவுக்கு
என்ன நடந்ததென்றே
தெரியாமல் போனது.
நாம்
விசாரணைகளை மேற்கொண்டபோது சீனாவில் அத்தகைய ஒரு
நிறுவனம் செயற்படவில்லை
என்ற தகவலே
எமக்கு கிடைத்தது.
பீஜிங்கில்
உள்ள எமது
இலங்கை தூதுவரான
கருணாசேன கொடித்துவக்குக்கு
இது தொடர்பில்
நான் அறிவித்தேன்.
எலையிட்
என்ற நிறுவனம்
தொடர்பில் ஆராய்ந்து
தகவல்களை தெரிவிக்குமாறு
கோரியிருந்தேன். அவர் துரிதமாக செயற்பட்டு அவ்வாறு
ஒரு நிறுவனம்
சீனாவில் கிடையாது
என்ற பதிலையே
எமக்கு தந்தார். என்றும் ஜனாதிபதி
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment