ஜனாதிபதி தேர்தல் குறித்து
வெளியாகியுள்ள கருத்து கணிப்பு!
வெற்றிபெற போவது யார்?
எதிர்வரும் ஜனாதிபதி
தேர்தலில் எந்தவொரு
வேட்பாளருக்கும் 50 சதவீத வாக்குகளைப்
பெற்று வெற்றிபெறுவதற்கான
சந்தர்ப்பம் கிடைக்காது என்ற புத்தம்புதிய தகவல்
அண்மையில் நடத்தப்பட்ட
கருத்துக் கணிப்பின்போது
அம்பலமாகியிருக்கிறது.
இவ்வாறான சூழ்நிலையில்,
நடைபெறும் ஜனாதிபதி
தேர்தலில் தனித்து
போட்டியிட்டு எவருமே வெற்றிபெற முடியாத சந்தர்ப்பம்
காணப்படுகின்ற நிலையில், மறு தேர்தலுக்கான வாய்ப்பு
ஏற்படலாம் என்றும்
எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல்
எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி நடத்தப்படவுள்ள
நிலையில் தேர்தலுக்கான
கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை தற்சமயம் இடம்பெற்று
வருகின்றது. அடுத்தமாத முதல்வாரம் வேட்பு மனுக்கான
அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில்
ஜனாதிபதி தேர்தல்
குறித்து மக்கள்
கருத்துக் கணிப்பொன்று
நடத்தப்பட்டுள்ளதோடு எந்தவொரு தனி
வேட்பாளராலும் 50 சதவீத வாக்குகளைப் பெறமுடியாத நிலைமையே
தேர்தலில் ஏற்படும்
என்பது ஆய்வில்
அம்பலமாகியிருக்கிறது.
ஒட்டுமொத்த நாட்டையும்
உள்ளடக்குகின்ற வகையில் 63500 பேரை மாதிரியாகக் கொண்டு
2019ஆம் ஆண்டு
ஓகஸ்ட் முதலாம்
திகதி தொடக்கம்
31ஆம் திகதி
வரை இந்தக்
கணிப்பீடு நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா இளைஞர்
முன்னணி, சிறிலங்காவின்
முன்னாள் இளைஞர்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர்களான நாம், நாட்டிற்கான
தேசிய இயக்கம்,
இளைய அரச
சேவை ஒன்றியம்
ஆகிய பிரிவினர்கள்
இதில் பங்களிப்பு
செய்திருக்கின்றனர்.
0 comments:
Post a Comment