சவூதி அரேபியா முதல் முறையாக
சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளது

எண்ணெய் பொருளாதாரத்தை மட்டும் நம்பி இல்லாமல் சவூதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளது.

சவூதி அரேபியா வெள்ளிக்கிழமை முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்கப்போவதாக கூறி உள்ளது. தனது பொருளாதாரத்தை எண்ணெயை  மட்டும் நம்பி இருப்பதில் இருந்து விலக்கி வைப்பதற்கான உந்துதலின் ஒரு பகுதியாக  சுற்றுலா விசாக்கள் வழங்க உள்ளது.

இந்த சுற்றுலா திட்டம் என்பது சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் விஷன் 2030 சீர்திருத்த திட்டத்தின் மையப்பகுதிகளில்  ஒன்றாகும்.

சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய்  சுத்திகரிப்பு ஆலையின் மீது  ஆள்இல்லா விமான தாக்குதல் நடைபெற்றது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உலுக்கிய இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா ஈரானை குற்றம்சாட்டியது. பேரழிவுகரமான இந்த தாக்குதலுக்கு இரண்டு  வாரங்களுக்குப் பிறகு தற்போது இந்த சுற்றுலா விசா அறிவிப்பு வந்துள்ளது.

சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியில் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் கலந்துகொள்ள பார்வையாளர்களுக்கு கடந்த ஆண்டு சவூதி அரேபியா விசா வழங்கத் தொடங்கியது.

இது குறித்து சுற்றுலாத் தலைவர் அகமது அல் கத்தீப் கூறும்போது,

சவூதி அரேபியாவை சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்குத் திறப்பது நம் நாட்டுக்கு ஒரு வரலாற்று தருணம் ஆகும். இங்கு வந்தால் "பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்... நாம் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொக்கிஷங்களால் - ஐந்து யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன. ஒரு துடிப்பான உள்ளூர் கலாச்சாரம் மற்றும்  ஆச்சரியப்படக்கூடிய இயற்கை அழகு உள்ளன.

சவூதி அரேபியா  வெளிநாட்டு பெண்களுக்கான அதன் கடுமையான ஆடை  கட்டுப்பாட்டை எளிதாக்கும். சவூதி பெண்களுக்கு பொது உடைகள் கட்டாயமாக இருக்கும் உடல் மூடிய அபயா அங்கி இல்லாமல் அவர்களை செல்ல அனுமதிக்கிறது. எவ்வாறாயினும், வெளிநாட்டு பெண்கள் "அடக்கமான ஆடைகளை" அணிய வேண்டும் என கூறியுள்ளார்.

49 நாடுகளின் குடிமக்களுக்கு சவூதி அரேபியா ஆன்லைன் சுற்றுலா விசாக்களுக்கான விண்ணப்பங்களை சனிக்கிழமை முதல் வினியோகிக்கும் என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்து உள்ளது.

மது தடைசெய்யும் மற்றும் கடுமையான சமூக நெறிமுறைகளைக் கொண்ட கடுமையான சவூதி அரேபியா சுற்றுலாப் பயணிகளுக்கு கடினமானவையாக பலரால் பார்க்கப்படுகிறது.

புதிய சினிமாக்கள், கலப்பு-பாலின இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு களியாட்டங்களை சவூதி அரேபியாவிற்கு கொண்டு வந்துள்ள  தாராளமயமாக்கல் உந்துதலின் மூலம் இளவரசர் முகம்மது அதை மாற்ற முயல்கிறார்.

கடந்த ஆண்டு ஜமால் கஷோகியின் கொடூரமான கொலை மற்றும் பெண் ஆர்வலர்கள் மீதான ஒடுக்குமுறை உள்ளிட்ட சவூதி அரேபியாவின்  மனித உரிமைப் குறித்த சர்வதேச விமர்சனங்கள் இதன்மூலம் நீர்த்து போகலாம் என சரவதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்த சுற்றுலா விசா தற்போது வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்கள், அவர்கள் சார்ந்தவர்கள் மற்றும் முஸ்லிம் யாத்ரீகர்கள் மக்கா மற்றும் மதீனாவில் உள்ள புனித இடங்களுக்கு பயணிக்க தடை விதிக்கிறது.

அரசாங்கம், 2030 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம்  வரை சுற்றுலா பங்களிப்பு செய்யும் என்று நம்புகிறது, இது தற்போது 3  சதவீதமாக  உள்ளது.

2030 வாக்கில் வருடாந்திரம் 10 கோடி  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் துறை  10 லட்சம்  சுற்றுலா வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக ஒரு சுற்றுலாத் துறையை கட்டமைக்கும் முயற்சியில் சவூதி அரேபியா கோடிகளை குவித்துள்ளது.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top