மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃபின்
சட்டத்தரணி வாழ்க்கைக்கும்
அன்னாரின் வாதத் திறமைகளுக்கும்
வரலாற்றில் கட்டியம் கூறி நிற்கும்
இளமைக்கால சம்பவம்



அது 1958 – 1959  இடைப்பட்ட காலம் கல்முனை அல்- அஸ்ஹர் ஆண்கள் பாடசாலையில் ஒரு விசாரணை இடம்பெறுகின்றது.
மாணவன் ஒருவனின் வகுப்பறையிலுள்ள இருக்கையில் அஷ்ரஃப் ஊசி குத்தி வைத்து,அது அந்த மாணவனை பின்புறம் குத்திவிட்டதாகவும் மாணவன் அழுகையுடன் ஆசிரியரிடம் முறையிட்டபோது ஆசிரியரைக் கோபம் கொள்ள வைக்கிறது.
ஆசிரியர் கோபத்துடன் அஷ்ரஃபை அழைக்கிறார்.
மாணவன் அஷ்ரஃப் ஆசிரியரை நோக்கி எழுந்து வந்தார். வகுப்பில் உள்ள மாணவர்கள் நிசப்தமாக இருக்கிறார்கள். அஷ்ரஃபுக்கு கடுமையாக அடி விழப்போகின்றது என எதிர்பார்க்கின்றார்கள்.
கையை நீட்டு.......
ஆசிரியரின் கட்டளைக்கு கையை நீட்டுமுன், மாணவனான அஷ்ரஃப் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றான்.
“சார் இவரிடம் நான் ஒரு கேள்வி கேட்கலாமா”
தீர்ப்புக்கு முன் நியாயமான விசாரணை அவசியமல்லவா? ஆசிரியருக்கு அஷ்ரஃபின் கேள்வி நியாயமாகப்பட்டது.
அஷ்ரஃப் முறையீடு செய்த அந்த மாணவன் பக்கம் திரும்பினார்.
“நான் உமது இருக்கையில் ஊசி குத்தியதை நீர் கண்டாயா?“
“ஓ நான் கண்டேன்.....“ என்றான் முறையிட்ட மாணவன்.
அடுத்து வந்தது அஷ்ரஃபின் பதில்....
“உமது இருக்கையில் ஊசி குத்தியதைக் கண்ட நீ பிறகேன் ஊசிக்கு மேல் இருக்க வேண்டும்“
விசாரணை செய்த ஆசிரியருக்கு  சிரிப்பு வந்துவிட்டது. வழக்கும் வீசப்பட்டுப்போனது.
அந்த மாணவன்தான் பிற்காலத்தில் முஸ்லிம்களுக்கு அரசியல் சுய முகவரி பெற்றுத் தந்த சரித்திர நாயகன் கிழக்கின் இதயம் மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் 

மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் பிற்கால சட்டத்தரணி வாழ்க்கைக்கும் அன்னாரின் வாதத் திறமைக்கும் இச்சம்பவம் வரலாற்றில் கட்டியம் கூறி நிற்கிறது.

- ஏ.எல்.ஜுனைதீன்

ஊடகவியலாளர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top