சஜித் பக்கம் தாவும் சிரேஷ்ட அரசியல்வாதிகள்!
இன்று கட்சி மாறிய
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி நாவின்ன
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சித் தாவல் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி நாவின்ன ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இன்று இணைந்து கொண்டார்.
சஜித் பிரேமதாஸ தலைமையில் தற்போது நடைபெற்று வரும் செய்தியாளர் மாநாட்டில் எஸ்.பி நாவின்ன பங்கேற்றுள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட அரசியல் புரட்சி காரணமாக ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி மஹிந்த தலைமையிலான அணியுடன் எஸ்.பி. நாவின்ன இணைந்திருந்தார்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி மஹிந்தவுடன் இணைந்திருந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் நேற்று மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment