வூதி மன்னரின் நம்பிக்கைக்குரிய
மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை!

வூதி அரேபியா நாட்டு மன்னரின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர் அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.
                                                                                                                                                                                     
வூதி அரேபியா நாட்டு முன்னாள் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்-தின் மெய்க்காப்பாளராக பணியாற்றியவர் அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம்.

அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் 23-1-2015 அன்று இறந்தபின்னர் அவரது மகனும் தற்போதைய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஜிஸ் சவுத்-தின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளராக அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை ஜித்தா நகரில் வசிக்கும் நண்பர் ஒருவரை சந்திக்க அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம் சென்றிருந்தார். அப்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம்- நோக்கி அவரது நண்பர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் இச்சம்பவம் பற்றிய தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் கொலையாளியை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். அங்கு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பொலிஸார் காயமடைந்ததாக வூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top