இஸ்லாமிய
போதகரான ஹஜ்ஜுல் அக்பர்
நிபந்தனையற்ற பிணையில்
விடுதலை.
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் பிரபல
இஸ்லாமிய போதகருமான ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் சற்றுமுன் நிபந்தனையற்ற பிணையில்
விடுதலை செய்யபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வினரால் கைது செய்யபட்டு, தடுத்து வைக்கபட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று விடுதலை
செய்யப்பட்டு உள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களை
விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தலைமையில் முஸ்லிம்
இயக்கங்களின் தூதுக்குழு ஒன்று நேற்று முன் தினம்
உயர் பொலிஸ் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது அறிந்ததே.
ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பரின்
கைது தொடர்பாகவும் தூதுக்குழுவினர் உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
தீவிரவாதச் செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்து செயற்பட்ட ஒருவரைக் கைது
செய்திருப்பது குறித்து முஸ்லிம் சமூகம் கவலை கொண்டுள்ளதாகவும் தூதுக்குழுவினர்
சுட்டிக்காட்டிய நிலையில் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் சற்றுமுன் நிபந்தனையற்ற பிணையில்
விடுதலை செய்யபட்டுள்ளார்.
0 comments:
Post a Comment