பாகிஸ்தானுக்கு வந்த இம்ரான் கான்
விமானத்தில் கோளாறு
- நியூயார்க்கில் அவசர தரையிறக்கம்
  
.நா.சபை கூட்டத்தில் பங்கேற்று விட்டு இஸ்லாமாபாத் நகருக்கு புறப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வந்த விமானத்தில் தீடீரென கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சவூதி அரேபியா சுற்றுப்பயணத்தை முடித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் .நா.சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சவூதி மன்னரின் தனி விமானத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்றதாக முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில்,  .நா.சபை கூட்டத்தில் பங்கேற்று விட்டு இம்ரான் கான் இன்று நியூயார்க்கில் இருந்து இஸ்லாமாபாத் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முஹம்மது குரைஷி, உயரதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் பத்திரிகையாளர்களும் விமானத்தில் இருந்தனர்.

டோரன்ட்டோ நகர வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தபோது இம்ரான் கான் வந்த விமானத்தின் என்ஜின் பகுதியில் தீடீரென கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, நியூயார்க் நகரில் உள்ள ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை தொடர்புகொண்ட அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்த பின்னர் அங்கு இறக்கப்பட்ட விமானத்தில் பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எனவே, இன்றிரவு நியூயார்க் நகரில் தங்கும் இம்ரான் கான் நாளை பாகிஸ்தான் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top