டாக்டர் ஷாபியின்
அடிப்படை உரிமை மனு
குருணாகல்
போதனா வைத்தியசாலையின்
மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பான டாக்டர் சேகு ஷிஹாப்தீன்
மொஹம்மட் ஷாபி
தாக்கல் செய்திருந்த
அடிப்படை உரிமை
மனு மீதான
பரிசீலனை செய்வதற்கு
உயர் நீதி
மன்றம் நேற்று
தீர்மானித்துள்ளது.
இந்த
மனு ஜனவரி
மாதம் 24 ஆம்
திகதி உயர்
மன்றத்தினால் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சட்ட
விரோதமாக கருத்தடை
சத்திரசிகிச்சை மேற்கொண்டமை, முறையற்ற வகையில் நிதி
சேகரித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப்
பிரிவினரால் தாம் தடுத்து வைத்திருந்தமையை ஆட்சேபித்து,
டாக்டர் ஷாபி
அடிப்படை மனித
உரிமை மனுவை
தாக்கல் செய்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment