ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை
– கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளஅறிக்கை
ஆசிரியர்கள் அதிபர்களின் விடுமுறை லீவு தொடர்பாக கல்வி அமைச்சு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர், அதிபர்களின் சேவையில் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஆலோசனைகள் மற்றும் சிபாரிசு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைத்து ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரச சேவைகள் சம்பள முரண்பாட்டை நீக்கும் குழுவின் சிபாரிசை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக உள்ள நிலையில் தமது சம்பள முரண்பாட்டை அடிப்படையாக கொண்ட ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன விடுமுறையில் சேவைக்கு சமூகமளிக்காமை பெரும் அநீதியான செயற்பாடாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஊழியர்களுக்குள்ள உரிமையாகும். அதற்கு சவால் விடுக்கப்படவில்லை இருப்பினும் இடம்பெறக்கூடிய சம்பள அதிகரிப்பு குறித்து அறிந்து கொண்ட பின்னரும் தமது நடவடிக்கையின் காரணமாக பெறப்பட்ட வெற்றியாக சுட்டிக்காட்டி அங்கத்தவர்களை ஏமாற்றுவதற்கான மூலோபாயமாக பயன்படுத்தப்படும் தொழிற்சங்கங்களின் சந்தர்ப்பவாத செயற்பாடுகளில் ஏமாறுகின்றமை ஆசிரியர் அதிபர்கள் போன்ற புத்திசாலிமிக்க கௌரவமான தொழிலுக்கு ஏற்புடைய செயற்பாடு அல்ல என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டுக்கு அமைவாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டதுடன் இத்தொகை 106 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டதாகவும் அதே போன்று சம்பளம் அதிகரிக்கப்பட்டமை எந்தவொரு அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட நவடிக்கையாகும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் கடந்த ஜுலை மாதம் தெரிவித்துள்ளார்.
அரச சேவைக்குள் பொதுவாக நிலவும் சம்பள முரண்பாடு குறித்து நியமிக்கப்பட்ட றனுக்கெ குழுவிடம் ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக கல்வி அமைச்சு ஆலோசனைகளையும் சிபாரிசுகளையும் சமர்ப்பித்திருந்ததாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் கடந்த ஜுன் மாதம் 7 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
அதிபர்களுக்கான கொடுப்பனவு 650 ரூபாவில் இருந்து 6,500 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் அண்டு தொடக்கம் தாமதப்பட்டிருந்த பதவி உயர்வு பணிகள் தற்பொழுது முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்கு இடம்பெறவேண்டிய முறையை தயாரித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதிபர் சேவையை அரசியலில் இருந்து மீட்டெடுத்து அந்த சேவையில் அதிபர் தரத்தில் நிலவிய குறைபாடுகளை தீர்ப்பதற்காக போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு சுமார் 6,000 பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சிக்கான சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்பட்டமை, ஆசிரியர் சேவையில் 25,000 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டமை முதலான நடவடிக்கைகள் கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் அதாவது குறுகிய காலப்பகுயில் நிறைவேற்றப்பட்டன.
இவை கல்வித்துறையில் மனிதவள அபிவிருத்தியின் நோக்கமாக முன்னெடுக்கப்பட்ன என்றும் கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment