அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில்
9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில்
பிறந்த அபூர்வ குழந்தை

9-வது மாதத்தின் 11-வது நாளில் இரவு 9 மணி 11 நிமிடத்தில் பிறந்த குழந்தையின் எடை 9 பவுண்ட் 11 அவுன்ஸ் என்பது அபூர்வ நிகழ்வாக அங்கு பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ராணுவ தலைமையகம் வாஷிங்டன் பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மீதும் பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதி பயங்கர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.

2001-ம் ஆண்டு, 9-வது மாதமான செப்டம்பர் மாதம் 11-ந் திகதி நடந்த இந்த தாக்குதல்கள் உலக வரலாற்றின் கரும்புள்ளியாக அமைந்துள்ளன. கடந்த 11-ந் திகதி இந்த தாக்குதலின் 18-வது நினைவு தினம் அமெரிக்கா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.

அந்த நாளில் டென்னிசி மாகாணம், ஜெர்மன்டவுன் நகரில் உள்ள மெத்தடிஸ்ட் ஆஸ்பத்திரியில் இரவு 9 மணி 11 நிமிடத்தில் கேமட்ரியோன் மூர் பிரவுன் என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையின் எடை 9 பவுண்ட் 11 அவுன்ஸ் ஆகும்.

9-வது மாதத்தின் 11-வது நாளில் இரவு 9 மணி 11 நிமிடத்தில் பிறந்த குழந்தையின் எடை 9 பவுண்ட் 11 அவுன்ஸ் என்பது அபூர்வ நிகழ்வாக அங்கு பார்க்கப்படுகிறது.

இதுபற்றி கேமட்ரியோன் மூர் பிரவுன் கூறும்போது, “பேரழிவு மற்றும் அழிவுகளுக்கு மத்தியில் எனது மகள் புதிய வாழ்வாக அமைந்திருக்கிறாள்என பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்த குழந்தைக்கு பெற்றோர் கிறிஸ்டினா என பெயர் சூட்டி மகிழ்கின்றனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top