முல்லைத்தீவில் சட்டத்தரணிகள்
முன்னெடுத்த போராட்டம்
முல்லைத்தீவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சட்டத்தரணிகளால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பழைய வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்போராட்டம் பேரணியாக மாவட்ட செயலகம் வரை சென்றுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
இவ்வாறு அத்துமீறிய அடாவடிச் செயற்பாட்டிற்கு அப்பகுதி மக்கள் அவ்விடத்தில் எதிர்ப்பு தெரிவித்ததனர்.
இதன்போது நிகழ்ந்த மோதலில் சட்டத்தரணிகள் மற்றும் தமிழ்மக்ககள் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த மதகுருவின் உடல் தகனம் செய்யப்பட்டமை மற்றும் சட்டத்தரணிகள் ஆலய பூசகர் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.