மொட்டு சின்னத்தை கைவிட முடியாது
– மைத்திரிக்கு மஹிந்த அறிவிப்பு
வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின்
மொட்டு சின்னம்
மாற்றப்படாது என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்
தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு,
மகிந்த ராஜபக்ச
அறிவித்துள்ளார் என ஆங்கில நாளிதழ் ஒன்று
செய்தி வெளியிட்டுள்ளது.
மொட்டு
சின்னத்தை கைவிட்டு
பொதுச்சின்னத்தில் போட்டியிட்டால் தான்,
கோத்தாபய ராஜபக்சவுக்கு
ஆதரவளிக்க முடியும்
என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தெரிவித்துள்ளார்.
இந்த
நிலையில், மொட்டு
சின்னத்தை கைவிட
முடியாது என்று
மைத்திரிபால சிறிசேனவுக்கு மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக
கூறியுள்ளார்.
மொட்டு
சின்னத்தில் போட்டியிடுவதற்கு கோத்தாபய ராஜபக்ச ஏற்கனவே
கட்டுப்பணம் செலுத்தி விட்டார் என்றும்,
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர்
பொதுச் சின்னத்தில்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேச்சு
நடத்தலாம் என்றும்
மகிந்த ராஜபக்ச
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment